தமிழ்நாடு

“அடுத்த நான்கு மாதத்திற்கு பிறகு விவசாயிகளின் அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும்” : பொன்முடி உறுதி !

தமிழக விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்தது தி.மு.க ஆட்சிதான். எனவே மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என பொன்முடி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

“அடுத்த நான்கு மாதத்திற்கு பிறகு விவசாயிகளின் அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும்” : பொன்முடி உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பணப்பாக்கம், அன்ராயநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் “அ.தி.மு.கவை நிராகரிப்போம்” என்ற மக்கள் கிராம சபை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் விஸ்வநாதன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.

இதில். தி.மு.க., துணைப்பொதுச் செயலாளரும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான க. பொன்முடி கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் இலவச கேஸ் அடுப்பு, இலவச வண்ணத் தொலைக்காட்சி, முதியோர் உதவித்தொகை என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான். எனவே மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வரும்போது விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என தி.மு.க தலைவர் உறுதி அளித்துள்ளார்.

அதன்படி, இன்னும் நான்கு மாத காலத்திற்குள் விவசாயிகளின் அனைத்து கடன்களும் ரத்து செய்யப்படும் எனவே தமிழக மக்கள் தி.மு.கவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.கவின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories