தமிழ்நாடு

“13,000 பேரை சாகடித்து விட்டு ‘கொரோனாவை வென்ற மகான்’ என எடப்பாடிக்கு போஸ்டர் அடிப்பதா?”: ஐ.லியோனி சாடல்

வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க மக்கள் தயாராகி விட்டனர் என விடியலை நோக்கிய பிரச்சாரத்தில் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

“13,000 பேரை சாகடித்து விட்டு 
 ‘கொரோனாவை வென்ற மகான்’ என எடப்பாடிக்கு போஸ்டர் அடிப்பதா?”: ஐ.லியோனி சாடல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை திருவொற்றியூரில் கிழக்கு பகுதி தி.மு.க சார்பில் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற தேர்தல் பிரச்சாரம் கூட்டம் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு தனியரசு முன்னிலையில், வட கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும்மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தலைமையில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து திருவெற்றியூர் தேரடி சன்னதி தெருவில் உள்ள பூமாலை கடைகள் வியாபாரிகள் அனைவரிடமும் குறைகளை கேட்டறிந்தார். திருவெற்றியூரில் மார்க்கெட் பகுதியில் உள்ள மீனவ பெண்களை சந்தித்து அவர்களிடம் உரையாற்றினார்.

பின்னர் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி உறுதி என்பதை செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடத்தில் உள்ள எழுச்சி உணர்த்துவதாக சுட்டிக்காட்டினார். மேலும் மூளையே இல்லாதவன் பயன்பாடு இல்லாமல் இருப்பான் அதிக அறிவு உள்ளவன் திறமைசாலியாக இருப்பான் ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட இருப்பவர்தான் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார்.

“13,000 பேரை சாகடித்து விட்டு 
 ‘கொரோனாவை வென்ற மகான்’ என எடப்பாடிக்கு போஸ்டர் அடிப்பதா?”: ஐ.லியோனி சாடல்

கொரோனாவை வென்றெடுத்த மகான் என போஸ்டர் ஒட்டுகிறார்கள். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இந்தியாவிலேயே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் சுமார் 13,000 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்த அவர், 13 ஆயிரம் பேரை சாகடித்து விட்டு கொரோனாவை வென்ற மகான் என கூறுவது எவ்விதத்தில் நியாயம் என நகைச்சுவையாக கூறினார்.

அதுமட்டுமல்லாது, கொரோனாவை தடுக்கும் பொருட்களில் கூட ஊழல் செய்திருப்பதாக தெரிவித்தார் முக கவசத்தை 4 ரூபாய்க்கு வாங்கி அரசாங்கத்தில் 13 ரூபாய்க்கு கொடுத்து இருப்பதாகவும், மருந்து தெளிக்கும் மிஷினில் 20,000 ரூபாய்க்கு வாங்கி 60,000 ரூபாய்க்கு கணக்கு காட்டியுள்ளனர். பிளீச்சிங் பவுடர் ஒரு மூட்டை 200 ரூபாய்க்கு வாங்கி 600 ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு காட்டி இருப்பதாக தெரிவித்தார்.

உயிருக்குப் போராடிக் கொண்டு இருப்பவர்கள் இடம் சொத்தை அபகரிப்பது போன்று எடப்பாடி அரசு செய்துள்ளது. இதனை தோலுரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் புகார் மனு அளித்ததுள்ளார். தமிழகத்தில் வரும் தேர்தலில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதலமைச்சராக பதவியேற்பார் என்று அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories