தமிழ்நாடு

“எங்களுக்கு உயர்மின் கோபுரம் வேண்டாம்” - ரத்தத்தில் கையெழுத்திட்டு திருப்பூர் விவசாயிகள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் - படியூர் பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்

“எங்களுக்கு உயர்மின் கோபுரம் வேண்டாம்” - ரத்தத்தில் கையெழுத்திட்டு திருப்பூர் விவசாயிகள் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உயர்மின்கோபுரம் திட்டத்தை கைவிடக்கோரி காங்கேயத்தில் விவசாயிகள் 4வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று உயர்மின் கோபுரம் வேண்டாம் என விவசாயிகள் ரத்தத்தில் கையொப்பமிட்டு போராட்டம்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உயர்மின் கோபுரங்கள் திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை திருப்பூர் மாவட்டம் - படியூர், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம், மதுரை மாவட்டம் - வாலந்தூர் ( உசிலம்பட்டி) ஆகிய இடங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

“எங்களுக்கு உயர்மின் கோபுரம் வேண்டாம்” - ரத்தத்தில் கையெழுத்திட்டு திருப்பூர் விவசாயிகள் போராட்டம்!

அதன்படி திருப்பூர் மாவட்டம் - படியூர் பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் 4 வது நாளான இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயர் மின் கோபுரம் எங்களுக்கு வேண்டாம் எனவும் உயர்மின் கோபுர திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தங்களது ரத்தத்தில் கையொப்பமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

banner

Related Stories

Related Stories