தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு நிகழ்வில் தொடரும் மோசடி புகார்கள் : தமிழனின் வீர விளையாட்டில் அதிமுக அரசு நிகழ்த்திய அவலம் !

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், சிறந்த வீரர் தேர்வு செய்வதில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு நிகழ்வில் தொடரும் மோசடி புகார்கள் : தமிழனின் வீர விளையாட்டில் அதிமுக அரசு நிகழ்த்திய அவலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த போட்டியில், 710 காளைகள், 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

மேலும் காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கு தங்கக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து காளையை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு வழங்கிய தங்கக்காசு தரமற்ற வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாது முன்னதாக போட்டில் பங்கேற்க வழங்கப்பட்ட டோக்கன்களிலும் பெரும் குளறுபடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டினர்கள்.

இந்நிலையில், தற்போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெற்ற போட்டிகளில் சிறந்த வீரர் தேர்வு செய்வதில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு நிகழ்வில் தொடரும் மோசடி புகார்கள் : தமிழனின் வீர விளையாட்டில் அதிமுக அரசு நிகழ்த்திய அவலம் !

இதுதொடர்பாக வெளியான தகவலில், கடந்த 15ம் தேதி பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், பிரபாகரன் என்பவர் 17 காளைகளை பிடித்ததாக கூறி, 2வது பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவருக்கு ஒரு பவுன் தங்கக்காசு, கோப்பை உள்ளிட்ட பரிசுப் பொருட்களை கமிட்டி வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் கூறுகையில்,“பாலமேடு ஜல்லிக்கட்டில், நான் 17 காளைகளை படித்தேன். 18வது காளையை பிடித்தபோது, கமிட்டியில் இருந்தவர்கள் எல்லைக்கோடு வரை காளையை பிடிக்கவில்லை என்று அறிவித்து விட்டனர்.

நான் கடந்த முறை காரை பரிசாக பெற்றதால், இந்த முறை எனக்கு பரிசு வழங்கக்கூடாது என கமிட்டி முடிவு செய்து, என்னை நிராகரித்து விட்டார்கள். இதற்காக நான் நீதிமன்றம் செல்வேன். என்னிடம் காளைகளை பிடித்ததாக வீடியோ ஆதாரம் உள்ளது” என்றார்.

ஜல்லிக்கட்டு நிகழ்வில் தொடரும் மோசடி புகார்கள் : தமிழனின் வீர விளையாட்டில் அதிமுக அரசு நிகழ்த்திய அவலம் !

இந்த சர்ச்சை முடிவதற்குள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டில், முதல் பரிசு பெற்ற கண்ணன் பனியனை மாற்றி அணிந்து வந்து பரிசை பெற்றதாக அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது, கடந்த 16ம் தேதி நடந்த அலங்காநல்லூ ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்றில், ஹரிகிருஷ்ணன் என்பவர் 33ம் நம்பர் பனியன் அணிந்த போட்டியில் கலந்துக்கொண்டு, 7 காளைகள் பிடித்துள்ளார். இடையில் காயம் ஏற்பட்ட தனது பனியனை கழற்றி மற்றொரு நபரான கண்ணனிடம் வழங்கிவிட்டு ஹரிகிருஷ்ணன் சென்றுள்ளார்.

அதன்பின்னர் கண்ணன் 33ம் நம்பர் பனியனை அணிந்துக் கொண்டு 7 காளைகளை பிடித்துள்ளார். ஆனால் போட்டியின் இறுதியில், ஹரிகிருஷ்ணன் பிடித்த 7 காளைகள், கண்ணன் பிடித்த 5 காளைகள் சேர்த்து 33ம் நம்பர் பனியன் அணிந்தவர் அதிக காளைகளை பிடித்ததாக வருவாய்த்துறை கணக்கிட்டு முதலிடத்துக்கு தேர்வு செய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு நிகழ்வில் தொடரும் மோசடி புகார்கள் : தமிழனின் வீர விளையாட்டில் அதிமுக அரசு நிகழ்த்திய அவலம் !

ஆனால், மருத்துவ பரிசோதனை பதிவேட்டில் 33ம் நம்பரில் ஹரிகிருஷ்ணன் என்றே குறிப்பிடப்பட்ட பட்டுள்ளது. அதில் கண்ணன் பெயர் இடம் பெறவில்லை என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்ட விழாவில், காளையை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு வழங்கிய தங்கக்காசுகள் தரமற்ற வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிறந்த வீரர்கள் தேர்விலும் குளறுபடி பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories