தமிழ்நாடு

சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர் (படங்கள்)

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள வள்ளுவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர் (படங்கள்)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தவப்புதல்வன் ஐயன் திருவள்ளுவரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக திமுக ஆட்சியில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்து சிறப்பித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.

குமரிக்கடல் முனையில் 133 அடி உயரத்தில் வானுயர தமிழ் புலவன் வள்ளுவனுக்கு சிலை அமைத்து பெருமை சேர்த்தார் தலைவர் கலைஞர். திக்கெட்டும் திருக்குறளின் புகழ் பரவும் விதமாக கர்நாடக மாநில எல்லையிலும் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி திமுக செய்தித்தொடர் இணைச்செயலாளர் ரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பகுதிச்செயலாளர் அகஸ்டின் பாபு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் நுங்கை வி.எஸ்.ராஜ்,. வட்டச்செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் வள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.

சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர் (படங்கள்)
சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர் (படங்கள்)
சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர் (படங்கள்)
சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர் (படங்கள்)
சென்னையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர் (படங்கள்)
banner

Related Stories

Related Stories