தமிழ்நாடு

தந்தை பெரியாரின் புத்தகங்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது!

இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் தந்தை பெரியாரின் நூல்களை எரிக்க முயன்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தை பெரியாரின் புத்தகங்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவையில் போகி பண்டிகையின்போது, தந்தை பெரியாரின் நூல்களைக் கொளுத்த முயன்ற இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் மக்கள் தலைவர்களை அவமதிக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை அசோக் நகர் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் பிரசன்னா தலைமையில் கூடிய சிலர், தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’, ‘கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்' உள்ளிட்ட சில புத்தகங்களை தீயிட்டுக் கொளுத்த முயன்றனர்.

அப்போது அங்கு வந்த கோவை போலிஸார் நூல்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தி பிரசன்னா என்பவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் பிரசன்னா மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கணபதி ரவி, கார்த்திகேயன், தேவராஜ் ஆகியோர் மீது கோவை மாநகர போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பொங்கல் விழா கொண்டாடப்படுவதையொட்டி, இந்து மக்கள் கட்சியினர் தந்தை பெரியார் நூல்களை எரித்து வன்முறையைத் தூண்ட முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories