தமிழ்நாடு

“உதவி கேட்டு வைரலான சிறுமியின் வீடியோ” : உடனடியாக தீர்த்து வைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

மேட்டூர் அடுத்த கருப்பு ரெட்டியூர் பகுதியில், பாதை ஆக்கிரமிப்பு பிரச்சனையை சுமூகமாக முடித்துகொடுத்ததற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வீடியோ வெளியிட்ட சிறுமி நன்றி தெரிவித்தார்.

“உதவி கேட்டு வைரலான சிறுமியின் வீடியோ” : உடனடியாக தீர்த்து வைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கருப்பு ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகள் சுவாதி (12) அருகில் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் வண்டிக்கரன் காட்டிலிருந்து பொங்கியண்ணன் தோட்டத்திற்கும் செல்லும் பாதையை செல்வம் என்பவர் பாதையை ஆக்கிரமித்து வழியை மறித்துள்ளார்.

இதனால், தங்கள் வீட்டிற்கு செல்ல வழியில்லை எனவும், இதற்கு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுவாதி பேசி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்த வீடியோவை கண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதியை தொடர்புக்கொண்டு, வழித்தட பிரச்சினையை பேசி தீர்க்கும்படி அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து, இன்று இப்பகுதிக்கு நேரில் வந்த டி.எம்.செல்வகணபதி மற்றும் நங்கவள்ளி, ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் பாதை ஆக்கிரமிப்பு பிரச்சனையை பேசி சுமுகமாக முடித்து வைத்தனர்.

“உதவி கேட்டு வைரலான சிறுமியின் வீடியோ” : உடனடியாக தீர்த்து வைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

பின்னர் டி.எம்.செல்வகணபதியின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம், வழித்தட பிரச்சினையை சுமுகமாக முடித்து வைத்ததற்காக சிறுமி சுவாதி நன்றியை தெரிவித்தார். சமூக வலைதளங்கள் மூலம் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கச் செய்தி சிறுமியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories