தமிழ்நாடு

“அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேறும்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

“ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் காத்திருங்கள்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேறும்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பணிபுரிந்த காலத்திலேயே உயிர் இழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு, தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலா மூன்று லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றுது.

இந்த நிகழ்ச்சியில், பேசிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன், “புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். இதனை 2021-ம் அமைகின்ற தி.மு.க ஆட்சி நிறைவேற்ற வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

இதில் கலந்துகொண்டு உயிர் இழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிதி உதவியை வழங்கிய பின், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தி.மு.க ஆட்சி தான் ஆசிரியர்கள் கேட்டதை எல்லாம் நிறைவேற்றியது. சொன்னதை மட்டுமல்ல சொல்லத்தையும் செய்தது. தி.மு.க வின் தேர்தல் அறிக்கையை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

“அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேறும்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

விரைவில் தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். தி.மு.க குழு மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறது. அதில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையும் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளீர்கள். நானும் நம்பிக்கையோடு உள்ளேன். நீங்களும் நம்பிக்கையோடு காத்திருங்கள். அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேறும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories