தமிழ்நாடு

உயிரோடு உள்ளவர்களை இறந்துவிட்டதாக பட்டியல் தயாரித்த அதிமுக : முறைகேடுகளை அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!

கரூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாமில் உயிரோடு உள்ளவர்களை இறந்துவிட்டதாக அதிமுகவினர் பட்டியல் தயாரித்து மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளதாக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி குற்றச்சாட்டினார்.

உயிரோடு உள்ளவர்களை இறந்துவிட்டதாக பட்டியல் தயாரித்த அதிமுக : முறைகேடுகளை அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டப் பேரவைக்கு 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில், புதிய வாக்காளர் சேர்ப்பது, உயிரிழந்தவர் வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, இடமாறுதல் செய்வது உள்ளிட்ட பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளில் ஆளுங்கட்சியினர் திமுகவிற்கு வாக்களிக்க கூடிய நபர்கள் என்று கூறக்கூடிய நபர்களை திட்டமிட்டு வாக்காளர் பட்டியல் இருந்து நீக்குவதாகவும், முறைகேடாக பல வாக்காளர்களை அ.தி.மு.கவினர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளித்து வருவதாகவும் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார்.

உயிரோடு உள்ளவர்களை இறந்துவிட்டதாக பட்டியல் தயாரித்த அதிமுக : முறைகேடுகளை அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, ”வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிடாத ஒரு படிவத்தை அ.தி.மு.கவே முறைகேடாக தயார் செய்துள்ளது.

அதுமட்டுமல்லாது, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பூத்களில் கணக்கெடுத்து தி.மு.கவினர் வாக்குகளை நீக்கி வருகின்றனர். குறிப்பாக, உயிரோடு உள்ள பலரையும், அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர் கையொப்பத்துடன் கூடிய படிவத்தில் இறந்தவர்களாக குறிப்பிட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்” என்றார்.

மேலும், அ.தி.மு.கவினர் உயிரிழந்ததாக கூறிய இரண்டு பெண்களை பத்திரிக்கையாளர்கள் முன்பு எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி நிறுத்தினார். அவர்கள் இருவரும் கரூர் தொகுதியில் உள்ள சின்ன காளிபாளையம், பெரியகாளி பாளையத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை மற்றும் அனிதா என செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, இவர்கள் இருவரும் நிரந்தரமாக சின்ன காளிபாளையம் பெரியகாளிபாளையத்தில் வசித்து வருகின்றனர்.

உயிரோடு உள்ளவர்களை இறந்துவிட்டதாக பட்டியல் தயாரித்த அதிமுக : முறைகேடுகளை அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!

ஒரே வாக்குசாவடியில் வாக்களித்து வருபவர்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் இறந்து விட்டதாக அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர் முகவர் தனது கைப்பட கடிதம் எழுதி மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார்.

இதுபோலவே மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு. பூத்திலும் பல வாக்காளர்கள் உயிரிழந்து விட்டதாக கூறி அ.தி.மு.கவினர் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத தேர்தல் ஆணையம் வெளியிடாத ஒரு படிவத்தை தாங்களாகவே தயாரித்து அதில் உயிரோடு இருக்கும் பல வாக்காளர்களை இறந்துவிட்டதாக பூர்த்தி செய்து மாவட்ட நிர்வாகத்துடன் கொடுத்துள்ளனர்.

இது இதற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழியும் உடந்தையாக உள்ளார். மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு புறம்பாக வாக்காளர்களை நீக்கும் பணியில் அ.தி.மு.கவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் துணை போகிறது. மேலும், இது தொடர்பாக வழக்கு ஒன்றை தி.மு.க சார்பில் தாக்கல் செய்ய உள்ளோம் என தெரிவித்தார்.

அ.தி.மு.கவினர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய படிவம் என்ற ஒரு படிவத்தையும் செய்தியாளர் முன்பு காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories