தமிழ்நாடு

தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு!

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக  கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராக பணியாற்றிய கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர் பணியிடங்களை நிரப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கிரிஜா வைத்தியநாதன். வருவாய் நிர்வாக ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வருமா ஆகிய மூவரை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்ய மத்திய அமைச்சரவையின் பணி நியமன குழு கடந்த 12ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தது.

இதில் கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக  கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு!

இம்மனுவில் தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5ன் படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும் அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் ஐந்து ஆண்டுகளுக்கு இல்லை.

குறிப்பாக 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே அவர் சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் இவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது என்ற காரணத்தை கருத்தில் கொண்டு இவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

banner

Related Stories

Related Stories