தமிழ்நாடு

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவல் உதவி ஆணையர் மகன் மீது வழக்குப் பதிவு - போலிஸ் விசாரணை !

சென்னை மத்திய கைலாஷ் அருகே குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியத கோயம்பேடு காவல்துறை உதவி ஆணையர் ஜெயராமன் மகன் உள்பட 3 பேரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவல் உதவி ஆணையர் மகன் மீது வழக்குப் பதிவு - போலிஸ் விசாரணை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை ஓஎம்ஆர் சாலையிலிருந்து கோட்டூர்புரம் நோக்கி அதிகாலை அதிவேகமாக கார் ஒன்று வந்துகொண்டிருந்தது கட்டுப்பாட்டை இழந்த கார் மத்திய கைலாஷ் அருகே சென்டர் மீடியனில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது .

இந்த தகவலறிந்த மயிலாப்பூர் போக்குவரத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குடிபோதையில் காரில் இருந்த மூன்று பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது கோயம்பேடு காவல்துறை உதவி ஆணையர் ஜெயராமன் மகன் நவீன் ராஜ் என தெரியவந்தது.

இவர் நந்தனத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். காரில் இருந்தது அவரது நண்பர்கள் கோட்டூரை சேர்ந்த யஸ்வந்த் ராஜா, கொளத்தூரை சேர்ந்த அரவிந்த் என்பதும் தெரியவந்தது.

விபத்தை ஏற்படுத்தி தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது இந்த வழக்கானது அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த விபத்தால் மத்திய கைலாஷ் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories