தமிழ்நாடு

“வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்” - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் வெள்ளிக்கிழமையன்று சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் வெள்ளிக்கிழமையன்று சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த சாதக பாதக அம்சங்களை உள்ளடக்கி தமிழகத்தின் நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தும் வகையில் சிறப்புக் கூட்டம் சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், பொருளாதார ஆய்வாளர்கள், முன்னோடி விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்று கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், “வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல. நாட்டுப்பற்று என்ற போர்வையில் நாட்டையே அழிக்கும் விதத்தில் வாழ்வாதாரத்தையே அழிக்கும் சட்டமாக அமைந்துள்ளது.

மாநில பட்டியலில் இருந்த வேளாண் துறையை மத்திய அரசுக்குக் கீழ் கொண்டு வருவதற்கான முதல் கட்ட முயற்சியாக இந்த வேளாண் சட்டம் அமைந்துள்ளது.

இந்தியாவில் இச்சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன நிலையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். வேளாண் சட்டத்தை ஆதரித்து அ.தி.மு.க அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளது.

டெல்லியில் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் விடுதலைக்கான போராட்டத்தில் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் வெள்ளிக்கிழமையன்று சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories