தமிழ்நாடு

நாகையில் மக்கள் பயன்பாட்டில் இருந்த சமுதாயக் கூடத்தை இடித்து மாட்டுத் தொழுவமாக்கிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் சமுதாய கூடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நாகையில் மக்கள் பயன்பாட்டில் இருந்த சமுதாயக் கூடத்தை இடித்து மாட்டுத் தொழுவமாக்கிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தலைஞாயிறு அருகே ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வந்த சமுதாயக் கூடத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இடித்து தனது வீட்டின் மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தும் அவலம்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓரடியம்புலம் கிராமத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் கடந்த 1994ஆம் ஆண்டு வீரபாண்டியன் என்பவரிடம் இடம் பெற்று ரூபாய் 5 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டது.

500 நபர்கள் அமரும் வகையில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 2012 ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஓ.எஸ்.மணியன் தனது இறால் பண்ணைக்கான தீவனங்களை வைக்கும் இடமாக மாற்றினார்.

நாகையில் மக்கள் பயன்பாட்டில் இருந்த சமுதாயக் கூடத்தை இடித்து மாட்டுத் தொழுவமாக்கிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!

நல்ல நிலையிலிருந்த சமுதாயக் கூடத்தை கடந்த 2018 ஆண்டு கஜா புயலை காரணம் காட்டி சமுதாய கூடத்தை இடித்து தனது மாட்டுக் கொட்டகை அமைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட நிர்வாகத்திடம் சமுதாயக் கூடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடமிருந்து இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

banner

Related Stories

Related Stories