தமிழ்நாடு

தமிழக சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு... கணக்கில் வராத சுமார் ரூ.10 லட்சம் பறிமுதல்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு... கணக்கில் வராத சுமார் ரூ.10 லட்சம் பறிமுதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய சரக்கு லாரி, கண்டெய்னர் உள்ளிட்ட பல வாகனங்களை சோதனைச்சாவடிகளில் லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதிப்பதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சென்னை நசரத்பேட்டை, காட்பாடி, சேக்காடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல சோதனைச்சாவடிகளில் இன்று காலை முதலே சோதனை நடத்தி வந்தனர்.

சோதனையில் நசரத்பேட்டை வாகன சோதனைச்சாவடிகளில் கணக்கில் வராத ரூபாய் 3 லட்சத்தையும், காட்பாடி சோதனைச்சாவடியில் 1 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பல முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

தமிழக சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு... கணக்கில் வராத சுமார் ரூ.10 லட்சம் பறிமுதல்!

அதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தின் களியக்காவிளை, படந்தாலுமூடு ஆகிய சோதனைச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கணக்கில் வராத ரூ.84 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் களியக்காவிளை மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணதாஸ் மற்றும் படந்தாலுமூடு காவல்துறை சோதனைச் சாவடியில் பணியாற்றிய பேச்சிப்பாறை சிறப்பு காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் ஊழல் தடுப்புப்பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோக, பொள்ளாச்சியை அடுத்த தமிழக கேரள எல்லையான கோபாலபுரத்தில் ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியில் கணக்கில் வராத 50,200 ரூபாயும், ஓசூர் சோதனைச் சாவடியில் இருந்து ரூ.1.54 லட்சமும், ஊத்துக்கோட்டையில் 72,800 ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழக சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு... கணக்கில் வராத சுமார் ரூ.10 லட்சம் பறிமுதல்!

மேலும், தென்காசி செங்கோட்டை அருகே புளியக்கரை சோதனைச் சாவடியில் ரூ.48 ஆயிரத்து 270ம் கோவை அருகே உள்ள க.க.சாவடியில் போக்குவரத்து சோதனைச்சாவடியில், ரூ.87 ஆயிரமும், காட்பாடியில் உள்ள வாகன சோதனையில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்கண்ணன் மற்றும் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூபாய் 94 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகத்தின் 17 சோதனைச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கணக்கில் வராத சுமார் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories