தமிழ்நாடு

போக்குவரத்து துறையில் தொடர்கதையாகும் மாபெரும் ஊழல்... குற்றச்சாட்டுகளை அடுக்கும் சாலை பாதுகாப்பு நிபுணர்!

விண்ணப்பங்களை அழைப்பதற்காக எந்த ஒரு பொது அறிவிப்பையும் வெளியிடாமல், தமிழ்நாடு போக்குவரத்து துறை சட்டவிரோதமாக 8 நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

போக்குவரத்து துறையில் தொடர்கதையாகும் மாபெரும் ஊழல்... குற்றச்சாட்டுகளை அடுக்கும் சாலை பாதுகாப்பு நிபுணர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு போக்குவரத்து துறை, பொது சேவை மற்றும் சரக்கு வாகனங்களில் பெண்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் வாகன கண்காணிப்புக் கருவி பொருத்தும் திட்டத்தில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ஒரு வாகனத்திற்கு, பாதுகாப்பு கருவியின் விலை 10,000 என்ற விகிதத்தில் சுமார் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் மாபெரும் ஊழலில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ஈடுபட்டு வருவதாக சர்வதேச சாலை பாதுகாப்பு நிபுணர் டாக்டர் கமல் சோய் கூறினார்.

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏற்கனவே இந்த முறைகேடு குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் எடுத்துரைத்ததாகவும், ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்றும், தாமும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரைச் சந்தித்து இந்த முறைகேடு மற்றும் மாபெரும் ஊழலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியும் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காததால் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று இதை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

சி.பி.ஐ விசாரணை மற்றும் சுப்ரீம் கோர்ட்டை நாடி இந்த பெரும் ஊழலை தடுத்து நிறுத்தும்படி நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

பொது சேவை மற்றும் சரக்கு வாகனங்களில் அனைத்து வாகனங்களுக்கும், வாகன கண்காணிப்பு கருவிகளை பொருத்தும் சிஎம்பி விதி 125 எச் அமல்படுத்த வேண்டும். அதற்கான அனைத்து வசதிகளைக் கொண்ட மேம்பட்ட கருவியை தமிழக அரசு நியாயமான முறையில் ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு போக்குவரத்து சேவை துறை 2018 டிசம்பர் 31-ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட பொது சேவை வாகனங்களில் ஐஐஎஸ் 140 வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனங்களை பொருத்துவதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆர்எஸ் 140 சான்றளிக்கப்பட்ட வி எல் டி டி உற்பத்தியாளர்களை தங்கள் மாதிரிகளை மாநிலத்தில் பட்டியலிட்ட ஒப்புதல் பெற அழைப்பதற்காக எந்த ஒரு பொது அறிவிப்பையும் இதுவரை வழங்கவில்லை.

மாறாக நன்கு நிறுவப்பட்ட நடைமுறையை பின்பற்றாமல் 8 விஎல்டிடி உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே தன்னிச்சையாக ஒப்புதல் அளிப்பது வெளிப்படைத் தன்மையற்ற செயல் எனக் குற்றம்சாட்டியுள்ளார். வாகனங்களை கண்காணிப்பதற்கும் அவசர காலங்களில் அழைப்புகளை கையாள்வதற்கும் இணக்கமான பின் தளத்தில் பயன்பாட்டை ஏற்காதது இதன் மூலம் வெளிப்படையாக தெரிகிறது. இதனால் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முக்கிய நோக்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்களுக்கு அனுமதிகளை வழங்காமல் விண்ணப்பங்களை அழைப்பதற்காக எந்த ஒரு பொது அறிவிப்பையும் வெளியிடாமல், தமிழ்நாடு போக்குவரத்து துறை சட்டவிரோதமாக 8 நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் புறக்கணித்து , தமிழ்நாடு போக்குவரத்து துறை விதியை மீறி அமல்படுத்துவது தொடர்பான விவகாரங்கள் சட்டவிரோதமாக கையாண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

பாதுகாப்பு கருவிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ஜிபிஆர்எஸ் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் செயல்படுத்தாமல் கருவியின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் ஊழலில் வெறும் பணம் சம்பாதிக்கும் வழியை குறிவைத்து தமிழ்நாடு போக்குவரத்து துறை செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். உடனடியாக இது நிறுத்தப்பட வேண்டும் அல்லது நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிந்து இந்த முறைகேட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்துவோம் என்றார்.

banner

Related Stories

Related Stories