தமிழ்நாடு

“DD-யில் சமஸ்கிருத செய்தி அறிக்கை ஆணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்”: ஐகோர்ட் மதுரைக்கிளையில் முறையீடு!

பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கக் கோரிய ஆணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு தாக்கல் செய்யப்பட்டள்ளனர்.

“DD-யில் சமஸ்கிருத செய்தி அறிக்கை ஆணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்”: ஐகோர்ட் மதுரைக்கிளையில் முறையீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பொதிகை தொலைக்காட்சியில் நாள்தோறும் 15 நிமிடம் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசின் சமஸ்கிருத அறிக்கையை திரும்பப் பெறவேண்டும் என தமிழகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கக் கோரிய ஆணையை ரத்து செய்யக்கோரி முறையீட்டை முன்வைத்தார்.

அந்த முறையீட்டில், “பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்க வேண்டும் எனவும், வாராவாரம் சனிக்கிழமை 15 நிமிடங்களை வாராந்திர செய்தித்தொகுப்பிற்கு ஒதுக்கவேண்டுமெனவும் ஆணை பிறப்பித்துள்ளது.

“DD-யில் சமஸ்கிருத செய்தி அறிக்கை ஆணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்”: ஐகோர்ட் மதுரைக்கிளையில் முறையீடு!

தமிழ்மொழி நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்ட பொதிகை தொலைக்காட்சியில் இதுவரை வேறுமொழிச் செய்திகள் எதுவும் இடம்பெற்றிராத நிலையில், தமிழர்களின் பண்பாட்டு வாழ்விற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத சமஸ்கிருத செய்தியறிக்கையை ஏற்கமுடியாது.

ஆகவே, சமஸ்கிருத செய்தி அறிக்கை, சமஸ்கிருத வாராந்திர செய்தித்தொகுப்பு குறித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என முறையிட்டார். அதனை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories