தமிழ்நாடு

"2021ல் தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டுமென மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

“அமைச்சர் காமராஜ் ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இல்லை. சசிகலாவுக்கும் உண்மையாக இல்லை. வாக்களித்த மக்களுக்கும் உண்மையாக இல்லை.” எனப் பேசினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

"2021ல் தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டுமென மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் தலைப்பில் தமிழகம் முழுக்க தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் இன்று விவசாயிகளை சந்தித்துச் உரையாடிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மக்களிடையே பேசுகையில் தெரிவித்ததாவது :

தி.மு.க-வின் பிரச்சாரத்திற்கு இலவச விளம்பரம் செய்து கொடுத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி. 2021-ல் தி.மு.க தான் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.

அ.தி.மு.க ஊழல் ஆட்சியில் 10 ஆண்டுகளாக செய்த துரோகங்களை எடுத்துக் கூறவே இந்த பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளோம். இதே சமயத்தில் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். அடிமை அ.தி.மு.க ஆதரவு கொடுத்த சட்டத்திற்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால் விவசாயம் கார்ப்பரேட்களின் கைகளுக்குப் போய்விடும். உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஜெயலலிதா அரசு கூட ஒப்புதல் தரவில்லை; ஆனால் இப்போதைய அ.தி.மு.க அரசு பா.ஜ.கவிற்கு ஆதரவளித்துள்ளது.

"2021ல் தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டுமென மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்யும் ஊழல் அனைவருக்கும் தெரிந்துள்ளது. காமராஜ் எப்படி அமைச்சர் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அமைச்சர் காமராஜ் ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இல்லை. சசிகலாவுக்கும் உண்மையாக இல்லை. வாக்களித்த மக்களுக்கும் உண்மையாக இல்லை.” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories