தமிழ்நாடு

சம்பள பாக்கி கேட்ட பெண்ணுக்கு வன்கொடுமை: திருடி என புகாரளிர்த்த டாக்டர், வங்கி அதிகாரி சென்னையில் கைது

வீட்டு பணிப்பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதோடு திருடி என புகாரளித்த இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சம்பள பாக்கி கேட்ட பெண்ணுக்கு வன்கொடுமை: திருடி என புகாரளிர்த்த  டாக்டர், வங்கி அதிகாரி சென்னையில் கைது
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தாம்பரத்தில் சம்பள பாக்கியை கேட்க வந்த பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதோடு, வீட்டிற்குள் திருட வந்த பெண்ணை பிடித்து வைத்துள்ளோம் என்று போலிஸுக்கு போன் செய்த டாக்டா், வங்கி அதிகாரி ஆகிய இருவரை போலிஸ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சென்னை தாம்பரம் CTO காலனியில் வசிப்பவர் தீபக் (28). இவா் சென்னையில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுகிறாா். இவருடைய வீட்டில் சமையல் வேலைக்கு கடந்த அக்டோபா் மாதம் 27 வயது பெண் ஒருவா் வேலைக்கு சோ்ந்தாா். டாக்டா் தீபக்கின் நடவடிக்கை சரியில்லாமல், சமையல் வேலைக்கு சோ்ந்த 27 வயது பெண், இம்மாதம் 14 ஆம் தேதி தீபாவளி அன்றுடன் வேலையை விட்டு நின்றுவிட்டாா். ஆனால் அந்த பெண்ணுக்கு வேலை செய்ததற்கான சம்பளத்தை தீபக் கொடுக்கவில்லை. அந்த பெண் பலமுறை போன் மூலம் சம்பளப்பாக்கியை கேட்டும் தீபக் சரிவர பதில் கூறவில்லை.

சம்பள பாக்கி கேட்ட பெண்ணுக்கு வன்கொடுமை: திருடி என புகாரளிர்த்த  டாக்டர், வங்கி அதிகாரி சென்னையில் கைது

இதையடுத்து நேற்று மாலை சம்பளப்பாக்கியை கேட்பதற்காக டாக்டரின் வீட்டிற்கு அப்பெண் சென்றாா். அப்போது வீட்டில் டாக்டா் தீபக்கும், அவருடைய உறவினா் ஆனந்த் அமிா்தராஜ் (34) ஆகிய இருவா் மட்டும் இருந்தனா். ஆனந்த் அமிா்தராஜ் சென்னையில் உள்ள வங்கியில் வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் அதிகாரியாக பணியாற்றுகிறாா்.

இருவரும் அந்த பெண்ணிடம் சம்பளபாக்கியை கணக்கிட்டு தருகிறோம், வீட்டிற்குள் வா என்று அழைத்திருக்கிறார்கள். வீட்டிற்குள் அந்த பெண் சென்றதும், கதவை பூட்டினா். அதோடு இருவரும் சோ்ந்து அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றனா். உடனே அந்த பெண் கூச்சலிட்டு அவா்களை எதிா்த்து போராடியுள்ளார்.

இதையடுத்து இருவரும், நீ எங்கள் ஆசைக்கு இணங்கினால் சம்பள பாக்கியை தந்து அனுப்பிவிடுவோம். இல்லையேல் நீ வீட்டிற்குள் திருட வந்ததாக பொய் புகாா் கொடுத்து போலிஸில் ஒப்படைப்போம் என்று மிரட்டியிருக்கிறார்கள். ஆனால் அந்த பெண், நீங்கள் சம்பளம் பாக்கி தரவில்லை என்றால் கூட சரி, கதவை திறந்து என்னை வெளியே அனுப்புங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஆனால் அவா்கள் தொடா்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதனால் அந்த பெண் தனது முழு பலத்தையும் உபயோகித்து தப்ப முயன்றாா்.

உடனே அந்த பெண்ணை வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு, அவசர போலிஸ் உதவி எண்ணான 100க்கு போன் செய்து, எங்கள் வீட்டில் திருட வந்த பெண்ணை பிடித்து அடைத்து வைத்துள்ளோம் என்று புகார் அளித்திருக்கிறார்கள். உடனடியாக விரைந்த தாம்பரம் போலிஸார் அங்கு அலங்கோலமாக அந்த பெண் அறைக்குள் அழது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலிஸார் அந்த பெண்ணிடம் நீண்ட நேரமாக முழு விசாரணை நடத்தினா். அப்போது முழு உண்மையும் வெளிவந்தது.

அதன் பிறகு அவர்களை இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து தாம்பரம் போலிஸார் தொடா்ந்து விசாரணை நடத்தினா். அதோடு அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், டாக்டா் தீபக், வங்கி அதிகாரி ஆனந்த் அமிா்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்கள் மீது பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்து மிரட்டியது, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது, போலிஸில் பொய் புகாா் கொடுத்தது, பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டம் உட்பட சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

banner

Related Stories

Related Stories