தமிழ்நாடு

இந்திய வானிலை மையமா? இந்தி வானிலை மையமா? ‘நிவர்’ விவரங்களை இந்தியில் பதிவிட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு!

புயல் தொடர்பான எச்சரிக்கையை இந்தியில் வெளியிட்டதால் இந்திய வானிலை மையத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்திய வானிலை மையமா? இந்தி வானிலை மையமா? ‘நிவர்’ விவரங்களை இந்தியில் பதிவிட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி தலைமையிலான அரசு அமைந்த நாளில் இருந்து இந்தி பேசாத மாநில மக்கள் மீது எப்படியாவது இந்தியை திணித்துவிட வேண்டும் என்பதற்காக பல்வேறு வகைகளில் சூழ்ச்சி புரிந்து வருகிறது.

இதற்கு தமிழகத்தில் இருந்து வலுவான எதிர்ப்பு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு பின்னர் புறமுதுகிட்டு ஓடுவதையே மத்திய அரசு வழக்கமாக கொண்டிருக்கிறது.

இந்திய வானிலை மையமா? இந்தி வானிலை மையமா? ‘நிவர்’ விவரங்களை இந்தியில் பதிவிட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு!

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்ட நிவர் புயல் தொடர்பான பாதிப்பு மற்றும் புள்ளி விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதில், தமிழக மக்களுக்கு புயல் எச்சரிக்கையை மாநிலத்தின் அலுவல் மொழியாக உள்ள தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிவிப்பதை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் பக்கத்தில் முழுக்க முழுக்க இந்தியிலேயே பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேரிடர் காலத்தில் கூட மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றாமல் அவர்களை பாதுகாக்காமல் இந்தியை திணிப்பதையே முன்னெடுத்து வருவதற்கு மத்திய பாஜக அரசுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், புவி அறிவியல் துறையின் செயலாளரான மாதவன் ராஜீவன் புயல் தொடர்பான விவரங்களை இந்திக்கு பதிலாக தமிழிலும் பதிவிட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே புயல் விவரங்களை இந்தியில் வெளியிட்டதை அடுத்து இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என வலியுறுத்தி #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்கை இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories