தமிழ்நாடு

“திட்டமிட்டபடி பயணம் தொடரும்” : விடுவிக்கப்பட்ட பின் இரவிலும் பிரச்சாரத்தை தொடர்ந்த உதயநிதி ஸ்டாலின்!

“நாடாளுமன்ற தேர்தலை போல் இந்த சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்” என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“திட்டமிட்டபடி பயணம் தொடரும்” : விடுவிக்கப்பட்ட பின் இரவிலும் பிரச்சாரத்தை தொடர்ந்த உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் தி.மு.க தேர்தல் பரப்புரை துவங்கியுள்ளது. ஜனவரி 5ம் தேதி காஞ்சிபுரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையைத் தொடங்குகிறார்.

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 20ம் தேதி முதல் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தைத் துவங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து மக்கள் திரளோடு தனது தேர்தல் பரப்புரையைத் துவங்கிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை போலிஸார் கைது செய்தனர்.

“திட்டமிட்டபடி பயணம் தொடரும்” : விடுவிக்கப்பட்ட பின் இரவிலும் பிரச்சாரத்தை தொடர்ந்த உதயநிதி ஸ்டாலின்!

அதன்பிறகும் 2வது நாள் பரப்புரையை நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்தார். அப்போது மீனவர்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். பின்னர் பரப்புரையை துவங்க இருந்த உதயநிதி ஸ்டாலினை போலிஸார் மீண்டும் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில், 3வது நாளாக நேற்றைய தினம் நாகை மாவட்டம் குத்தாலத்தில் தனது தேர்தல் பரப்புரையை துவங்கினார். அப்போது குத்தாலம் கடைவீதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த வரவேற்பு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “தேர்தல் பிரச்சாரத்தை முதலில் துவங்கிய என்னை கைது செய்து, தி.மு.க-விற்கு மிகப்பெரிய வெற்றியை காவல்துறையினர் ஏற்படுத்தி தந்துள்ளனர். வரும் சட்டமன்ற தேர்தலில், நாடாளுமன்ற தேர்தலை போல், அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

“திட்டமிட்டபடி பயணம் தொடரும்” : விடுவிக்கப்பட்ட பின் இரவிலும் பிரச்சாரத்தை தொடர்ந்த உதயநிதி ஸ்டாலின்!

பின்னர் மீண்டும் பரப்புரையை உதயநிதி ஸ்டாலின் தொடங்கியதும், பிரச்சார வேனில் இருந்து உதயநிதி ஸ்டாலினை கீழே இறங்க போலிஸார் வலியுறுத்தினர். மேலும், கைது செய்வதாக உதயநிதி ஸ்டாலினிடம் போலிஸார் தெரிவித்தனர். இதனால் அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான தி.மு.க தொண்டர்கள் வாகனத்தை நகரவிடாமலும், கைதுக்கு கண்டனம் தெரிவித்தும் போலிஸாரை மறித்தனர்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “சென்னையில் அமித்ஷா நடத்திய கூட்டத்திற்கு மட்டும் அனுமதியளித்த காவல்துறையினர் எனக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?. இன்னும் 5 மாதம் தான் இவர்களது ஆட்டம். தற்போது, காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தாருங்கள்; நான் கைதாகிறேன்” எனத் தெரிவித்தார்.

பின்னர் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த போலிஸார், குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். வழக்கமாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து மாலை 6 மணிக்கு விடுவிப்பது வழக்கம் என்ற போதிலும், வழக்கத்திற்கு மாறாக போலிஸார் 8 மணி நேரம் திருமண மண்டபத்தில் உதயநிதி ஸ்டாலினை அடைத்து வைத்திருந்தனர்.

“திட்டமிட்டபடி பயணம் தொடரும்” : விடுவிக்கப்பட்ட பின் இரவிலும் பிரச்சாரத்தை தொடர்ந்த உதயநிதி ஸ்டாலின்!

இதனைக் கண்டித்து தி.மு.கவினர் மண்டபத்தின் வெளியே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிரடிப்படை மற்றும் ஆயுதம் ஏந்திய போலிஸார் மண்டபத்தின் வெளியே குவிக்கப்பட்டனர். அப்போது, எத்தனை மணிக்கு விடுவித்தாலும் பரப்புரை தொடரும் என உதயநிதி ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தார்.

இதனிடையே, உதயநிதி ஸ்டாலினை விடுவிக்கமால், காலம் தாழ்த்திய காவல்துறையை கண்டித்து தமிழகத்தில் பல பகுதிகளில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இரவு 11 மணியளவில் அவரை விடுவித்தனர். பின்னர் இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”எங்கள் பிரச்சார பயணத்தை தடுத்து மதியம் 2 மணிக்கு கைது செய்தவர்கள் இரவு 11 வரை விடவில்லை.

அதிரடிப்படை-ஆயுதம் ஏந்திய போலீஸ் என மிரட்டிப்பார்த்தனர். எனினும், நம் கழகத்தினரின் கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் தற்போது விடுவித்துள்ளனர். எனது பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து இரவிலும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடர்ந்தார். தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 11 மணி வரை விடுவிக்கப்படாததால் தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

banner

Related Stories

Related Stories