தமிழ்நாடு

ரூ.2,000 கோடி பாரத்நெட் டெண்டர் மீண்டும் நிறுத்திவைப்பு - விசாரணை ஆணையம் அமைக்குமா அ.தி.மு.க அரசு?

டெண்டர் முறைகேடுகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைக்குமா என சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

ரூ.2,000 கோடி பாரத்நெட் டெண்டர் மீண்டும் நிறுத்திவைப்பு - விசாரணை ஆணையம் அமைக்குமா அ.தி.மு.க அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து நடக்கும் டெண்டர் முறைகேடுகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைக்குமா என சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக, சட்ட பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தமிழக அரசானது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்குவதற்கு சாதகமாக விதிமுறைகளை வளைத்ததால் கடந்த ஜூன் மாதத்தில் ரத்து செய்யப்பட்ட 2000 கோடி மதிப்பிலான பாரத்நெட்  டெண்டர் திட்டமானது தற்போது மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜினீபர் நெட்வொர்க் என்ற நிறுவனமானது 05.11.2020 அன்று மத்திய அரசுக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில்  09.11.2020 அன்று  மத்திய அரசானது (DPIIT-Ministry of Commerce & Industry Department for Promotion of Industry & Internal Trade) இந்த டெண்டரை நிறுத்திவைத்துள்ளது. மேற்குறிப்பிட்ட புகாரின் மீது இறுதிமுடிவு எடுக்காமல் டெண்டரை தொடரக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சாலைகள் அமைக்க டெண்டர் விட்டதில் கிராமசபை ஒப்புதல் பெறப்படவில்லை என்பது உள்ளிட்ட பல விதிமீறல்களின் காரணமாக சென்னை உயர்நீதிமன்றமானது ரூ.2,650 கோடி மதிப்பிலான சாலைப்பணிகளுக்கு தமிழக அரசு செயல்படுத்த இருந்த டெண்டர்களை சென்னை உயர்நீதிமன்றமானது கடந்தமாதம் ரத்துசெய்ததை இச்சமயத்தில் நினைவுகூற வேண்டியது அவசியமாகிறது.

பாரத்நெட் டெண்டரில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து அறப்போர் இயக்கமானது ஜூலை 2020ல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் அளித்திருந்தும், இதுநாள் வரை அதன்மீது முக்கிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. ( டெண்டரில் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து Router கருவி வாங்கப்படாமல் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படுவதற்கு வசதியாக விதிமுறைகள் போடப்பட்டது என்பதே குற்றச்சாட்டு.)

முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா குறித்து வந்த ஊழல் புகார்களின் அடிப்படையில் ஓய்வுபெற்ற நீதிபதி.கலையரசன் அவர்களின் தலைமையில் 11.11.2010 அன்று விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையமானது விசாரணையைத் தொடங்கியுள்ளது.  இதே அணுகுமுறையில், மத்திய அரசும்-உயர்நீதிமன்றமும் தமிழக அரசின் டெண்டர்களை தொடர்ந்து ரத்துசெய்து வருவதற்கான காரணத்தை ஆராய- கடந்த சில ஆண்டுகளாக விடப்பட்ட டெண்டர் முறைகேடுகளுக்கு மூலகாரணம் என்ன என்பதை விரிவாக ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைக்கவேண்டும்.

ரூ.2,000 கோடி பாரத்நெட் டெண்டர் மீண்டும் நிறுத்திவைப்பு - விசாரணை ஆணையம் அமைக்குமா அ.தி.மு.க அரசு?

தமிழக அரசு இதைச்செய்ய மறுக்கும்பட்சத்தில் சென்னை உயர்நீதிமன்றமானது தாமாக முன்வந்து, தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் டெண்டர் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்து நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இவ்விசாரணையானது நடத்த முன்வரவேண்டும். மக்களின் வரிப்பணத்தை சூறையாடும் டெண்டர் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். ” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories