தமிழ்நாடு

இளம் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை : பெண் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது - அதிர்ச்சி சம்பவம் !

மதுராந்தகத்தில் இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஒரு பெண் உள்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சின்ன காலனி பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி இவருடைய 16 வயது பெண்ணை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் மதுராந்தகம் போலிஸார் விசாரணையில், மதுரையை சேர்ந்த பாஸ்கர் மற்றும் ராமு என்பவர் பெண்ணை கடத்திச் சென்று மதுரையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

மதுரை விரைந்து சென்று போலிசார் பாஸ்கர் மற்றும் ராமு இவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண் லதா ஆகிய 3 பேரை கைது செய்து இளம்பெண்ணையும் மீட்டனர். இந்த கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த இந்த மூன்று பேர் மீது இளம்பெண் கடத்தல் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்து இவர்கள் மூன்று பேரையும் போலிஸார் சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories