தமிழ்நாடு

“2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்” : வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

“2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்” : வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகம் 2021-ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் பணிக்காக ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு இன்று வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்கள்.

இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், தமிழகத்தில், 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 பேர் உள்ளனர். அதிலும் தமிழகத்திலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி இடம்பெற்றுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சதிய பிரதா சாகு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சதிய பிரதா சாகு

வாக்காளர் உள்ள தொகுதியாக கீழ்வேளூர் தொகுதியில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 107 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆண்கள் 3 கோடியே ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 370 பேரும், பெண்கள் 3 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 503 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6385 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், புதிய வாக்காளர்கள்.தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 8 ஆயிரத்து 413 பேர் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து ஆயிரத்து 700 பேர் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 581 மூன்றாம் பாலினம் 132 பேர் இடம் பெற்றுள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 13 லட்சத்து 75 ஆயிரத்து 198 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இன்று முதல் டிசம்பர் 15ம் தேதிக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுடைய வாக்காளர்கள், பெயரை நீக்க விரும்புவோர், திருத்த விரும்புவோர், இடமாற்றம் விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

“2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்” : வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!

வாக்காளர் பட்டியல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 21 மற்றும் 22ம் தேதியும் அதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதியும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாமகள் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளது

இதுதொடர்பான விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5ம் தேதி இறுதி செய்யப்பட்டு, ஜனவரி 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories