தமிழ்நாடு

பழனியில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு - அதிரவைக்கும் CCTV காட்சி!

பழனி அருகே தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனியில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு - அதிரவைக்கும் CCTV காட்சி!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வன்கொடுமைகள் போன்ற குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமீபகாலமாக துப்பாக்கி கலாசாரம் உருவாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழனி அருகே இடப்பிரச்சனை காரணமாக தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன், பழனி அப்பர் தெருவில் உள்ள காலி நிலத்தில் வேலி அமைப்பதற்காகச் சென்றுள்ளார். இந்த நிலம் தொடர்பாக விவசாயி இளங்கோவனுக்கும், தியேட்டர் உரிமையாளர் நடராஜன் என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, வேலி அமைக்கச் சென்ற இளங்கோவனிடம் நடராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இளங்கோவனின் உறவினர்களான பழனிசாமியும், சுப்பிரமணியும் சமாதானம் பேசச் சென்றுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றியதில், நடராஜன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பழனிசாமி மற்றும் சுப்பிரமணியைச் சுட்டுள்ளார்.

இதில் பழனிசாமிக்கு இடுப்பிலும், சுப்பிரமணிக்கு தொடையிலும் குண்டு பாய்ந்தது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பழனிசாமியையும், சுப்பிரமணியையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற நடராஜன், போலிஸாரிடம் சரணடைந்துள்ளார். அவரைக் கைது செய்த போலிஸார் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சி வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories