தமிழ்நாடு

“ஆரணியில் சிலிண்டர் வெடித்து தரைமட்டமான குடியிருப்பு - 3 பேர் பலி” : கவனக்குறைவால் நடந்த பரிதாப சம்பவம்!

ஆரணியில் இன்று பயங்கர அதிவேக சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து குடியிருப்பு வீடு தரைமட்டமானதில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரழந்தனர்.

“ஆரணியில் சிலிண்டர் வெடித்து  தரைமட்டமான குடியிருப்பு - 3 பேர் பலி” : கவனக்குறைவால் நடந்த பரிதாப சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுகாமூர் சாலையில் உள்ள மூதாட்டி முக்தா, வளர்ப்பு மகள் மீனா(18) இவரது வீட்டில் வாடகை குடியிருப்பில் இருப்பவர் ஜானகிராமன் மனைவி காமாட்சி சுரேஷ், ஹேமநாத் என்ற 2 மகன்களுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு மூதாட்டி முக்தா, சிலிண்டர் அணைக்காமல் சென்றதாகவும், காலையில் டீ போடுவதற்கு வந்து சிலிண்டரை ஆன் செய்துள்ளார். அப்போது ஏற்கனவே சிலிண்டர் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் அதிக வேக சத்ததுடன் வெடித்தது. இதில் வீடு தரைமட்டமானது.

இதனால், அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்த வந்த ஆரணி தீயணைப்பு துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

“ஆரணியில் சிலிண்டர் வெடித்து  தரைமட்டமான குடியிருப்பு - 3 பேர் பலி” : கவனக்குறைவால் நடந்த பரிதாப சம்பவம்!

மேலும் இதில் இடிபாடுகளில் சிக்கிய ஹோமநாத் (13) காமாட்சி (37) சந்திரம்மாள் உள்ளிட்ட 7 பேரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காமாட்சி, சந்திரம்மாள், ஹேமநாத் சிகிச்சை பலனின்றி உயிர் இறந்தனர். அதனையொடுத்து இது சம்மந்தமாக ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories