தமிழ்நாடு

“வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு : நுழைவுக் கட்டணம் 50% உயர்வு” : சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி !

வண்டலூர் உயிரியல் பூங்கா 8 மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், நுழைவுக்கட்டணம் திடீரென 50 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

“வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு : நுழைவுக் கட்டணம் 50% உயர்வு” : சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையை அடுத்த வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காவாக கருதப்படும். வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருடம்தோரும் சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வருகைபுரிகின்றனர்.

கொரோனா பெரும் தொற்றால் 17.3.20 அன்று முதல் பூங்கா மூடப்பட்ட நிலையில், இன்று முதல் பொது மக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக சில வழிகாட்டுநெறிமுறைகளுடன் பொது மக்களுக்கு திறக்கப்பட்டது, பார்வையாளர்கள் நுழைவுசீட்டுகளை பூங்காவின் இணையதளம் மூலமாகவோ, கைப்பேசி செயலி மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பூங்காவில் பெரும்பாலான பகுதிகள் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும், பார்வையாளர்கள் அதிகம் கூடும் இடங்களை நெரிசலை தவிர்ப்பதற்காக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். வெப்பநிலை பரிசோதனை செய்தபிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பூங்காவின் பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி இயந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.

“வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு : நுழைவுக் கட்டணம் 50% உயர்வு” : சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி !

அதேப்போல், வாகனங்கள் அனைத்தும் பூங்காவில் நுழையும் முன் அதன் சக்கரங்கள் கிருமிநாசினி மூலம் நனைந்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். பார்வையாளர்களுக்கு முக கவசம் அணிவது கட்டாயம். பார்வையாளர்கள் பூங்காவில் 2 மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், நோய் பரவாமல் இருக்க பார்வையாளர்கள் தடுப்புகளை தொடாமல் இருக்க வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் பூங்காவிற்கு வருகைதரும்போது கொரோனா தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் உரிய அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், பூங்காவில் பெரியவர்களுக்கு 75 ரூபாயிலிருந்து 90 ரூபாய் எனவும், சிறுவர்களுக்கு ரூ.35 லிருந்து ரூ.50 என வும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோது, “பூங்காவில் தண்ணீர் கேன் அதிகவிலைக்கு விற்பனை செய்வதாகவும், கழிவரை கட்டணம் ரூ.5 முதல் 10 வரை வசூலிப்பதாகவும் பொது மக்களின் புகாரை ஏற்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவரை, தாய்பால் ஊட்டும் அறை, ஆகியவை கட்டணம் சேர்த்து ஒரே விலையாக அறிவித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

“வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு : நுழைவுக் கட்டணம் 50% உயர்வு” : சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி !

கொரோனா காலத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கிருந்த மக்கள், இந்த விலை உயர்வால் மீண்டும் வீட்டிற்குள்ளேயே முடங்குவார்கள். பூங்காவில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளுக்கும், விலங்குகளை பராமரிப்பதற்கும் அதிக நிதி தேவைப்படும்.

அதற்காக ஒரேயடியாக 50 சதவீதம் நுழைவு கட்டணத்தை உயர்த்தி இருக்கக்கூடாது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை பூங்கா அதிகாரிகள் பரிசீலனை செய்து குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

banner

Related Stories

Related Stories