தமிழ்நாடு

“எந்த முகத்துடன் தூத்துக்குடிக்கு வருகிறீர்கள்?” : எடப்பாடி வருகைக்கு போஸ்டர் ஒட்டி ஊர் மக்கள் எதிர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில், முதல்வருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது.

“எந்த முகத்துடன் தூத்துக்குடிக்கு வருகிறீர்கள்?” : எடப்பாடி வருகைக்கு போஸ்டர் ஒட்டி ஊர் மக்கள் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்புப் பணி குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன இயந்திரம் துவங்கி வைக்க கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தூத்துக்குடி வருகை தந்தார்.

முதலில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான இயந்திரத்தை தொடங்கி வைப்பதற்காக வருகை தந்தார். அப்போது, தனியார் தங்கும் விடுதியில் இருந்து மருத்துவமனை வரக்கூடிய தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில், உள்ள அனைத்து கடைகளையும் காவல்துறையினர் திறக்க விடாமலும், திறந்த கடைகளை அடைக்கும்படி தெரிவித்து அனைத்து கடைகளையும் அடைக்க வைத்தனர்.

தீபாவளி நேரத்தில் இதுபோன்று கடைகளை அடைக்க வைத்தது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமின்றி, அரசு மருத்துவமனைக்கு எதிராக உள்ள உணவகங்களையும் மூடியதால் மருத்துவமனை தங்கியிருக்கும் நோயாளிகளின் உறவினர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

“எந்த முகத்துடன் தூத்துக்குடிக்கு வருகிறீர்கள்?” : எடப்பாடி வருகைக்கு போஸ்டர் ஒட்டி ஊர் மக்கள் எதிர்ப்பு!

மேலும் தூத்துக்குடி திருநெல்வேலி, திருச்செந்தூர் செல்ல கூடிய அனைத்து சாலைகளும் சுமார் நான்கு மணி நேரமாக மூடப்பட்டது. இதனால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியது இதனால் வெளியூர் செல்லக் கூடியவர்கள் வேலை நிமித்தமாக செல்லக்கூடியவர்கள் என அனைவரும் சிரமப்பட்டனர்.

கொரோனா பாதிப்புகள் குறித்த ஆய்வு பணிக்கு வந்த வருகைதந்த முதல்வருக்கு எந்தவிதமான சமூக இடைவெளியும் இன்றி வரவேற்பளித்து கொரோனா பரவலை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு தடை இருக்கும் நிலையிலும் பல இடங்களில் முதல்வரை வரவேற்பு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.

இது போல் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை இருக்கும் நிலையில், முதல்வரை வரவேற்க ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்தனர். இந்நிலையில், முதல்வருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க சார்பில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவிக்க்கபட்டது. மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“எந்த முகத்துடன் தூத்துக்குடிக்கு வருகிறீர்கள்?” : எடப்பாடி வருகைக்கு போஸ்டர் ஒட்டி ஊர் மக்கள் எதிர்ப்பு!

தி.மு.க சார்பில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில், “தூத்துக்குடியில் காவல் துறையால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வராத முதல்வர் எடப்பாடியே..

சாத்தான் குளத்தில் அப்பா/மகன் காவல்துறையின் சித்தரவதையில் படுகொலை செய்யப்பட்டபோது ஆறுதல் கூற வராத முதல்வர் எடப்பாடியே..

சொக்கன் குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதி தருவதாக வாக்குறுதி தந்து இன்று வரை நிறைவேற்றாத முதல்வர் எடப்பாடியே... எந்த முகத்துடன் தூத்துக்குடிக்கு வருகிறீர்கள்?” என வாசகங்கள் அடங்கியுள்ளது. போஸ்டரால் அதிர்ந்து போன மாவட்ட நிர்வாகம் போலிஸாருக்கு போஸ்டர்களை கிழித்தெறியும் வேலைக் கொடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories