தமிழ்நாடு

ஆந்திராவின் நிலை தெரியுமல்லவா? டிசம்பருக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் - ஐகோர்ட் அதிரடி கருத்து!

நீதிபதிகளே கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு மேல் திறக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவின் நிலை தெரியுமல்லவா? டிசம்பருக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் - ஐகோர்ட் அதிரடி கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேனி, உத்தமபாளையத்தில் சேர்ந்த ராம்பிரசாத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

தற்போது வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்காத நிலையில், தமிழகத்தில் சுமார் 11,000 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி இருக்கையில், நவம்பர் 16 முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என முதல்கட்ட அறிவிப்பும், பின்னர் விடுதிகள் திறக்கப்படும் என இரண்டாம் கட்ட அறிவிப்பும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இருக்கும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது மாணவ மாணவிகளுக்கு வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளது. மேலும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். இதனால் மாணவ மாணவிகளிடம் இருந்து பொதுமக்களுக்கும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆந்திராவின் நிலை தெரியுமல்லவா? டிசம்பருக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் - ஐகோர்ட் அதிரடி கருத்து!
PC

மேலும் சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே நவம்பர் 16 ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகள் தமிழகத்தில் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு, நீதிபதிகளே கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு மேல் திறக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள மாநிலங்களின் நிலைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. அதிகப்படியான பெற்றோர்கள் பள்ளி கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்றே கூறி வருகின்றனர் அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories