தமிழ்நாடு

ஹோட்டல் உரிமையாளரை அடியாட்களை வைத்து தாக்கிய அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் : சிசிடிவி வீடியோ வெளியானது !

சென்னை வேளச்சேரியில் ஹோட்டல் உரிமையாளரை அடியாட்களை வைத்து தாக்கும் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலரின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஹோட்டல் உரிமையாளரை அடியாட்களை வைத்து தாக்கிய அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் : சிசிடிவி வீடியோ வெளியானது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் எழில். இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர் 20 நாட்களுக்கு முன்பு வேளச்சேரி 100 அடி சாலையில் ஓட்டல் ஒன்றை வாடகை எடுத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவரது கடையில் அருகே பங்க் கடை ஒன்றை வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வேளச்சேரி அ.தி.மு.க பகுதி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான எம்.ஏ.மூர்த்தி இறக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஓட்டலுக்கு வெளியே எழிலும் அவரது நண்பர்களும் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

வேலை நடந்து கொண்டிருக்கும் போது ஏன் கும்பலாக நிற்கிறீர்கள் என மூர்த்தி கேட்டதாக கூறப்படுகிறது .இதனையடுத்து இந்த ஹோட்டலை புதிதாக வாடகை எடுத்துள்ளேன். அது தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறேன் என கூறியதாகவும் இதில் வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென மூர்த்தி ஆபாசமாக பேச துவங்கியுள்ளார்.

ஹோட்டல் உரிமையாளரை அடியாட்களை வைத்து தாக்கிய அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் : சிசிடிவி வீடியோ வெளியானது !

உடனே அவருடன் இருந்த அவரது அடியாட்களில் ஒருவர் எழிலை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளார். இதனால் எழில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இது அனைத்தும் ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் விலக்கி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர் எழில் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வேளச்சேரி போலிஸார் வழக்குப் பதிவு செய்ய தாமதபடுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தகவலறிந்து தி.மு.க சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் முயற்சியால் பின்பு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. மேலும், அ.தி.மு.க வேளச்சேரி பகுதி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான மூர்த்தி மற்றும் அவரது அடியாட்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் உரிமையாளரை அடியாட்களை வைத்து தாக்கிய அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் : சிசிடிவி வீடியோ வெளியானது !

பின்னர், புகாரின் பேரில் மூர்த்தி மற்றும் அவரது அடியாட்கள் வைத்து தாக்கியது தொடர்பாக சிஎஸ்ஆர் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆளும் கட்சி முன்னாள் கவுன்சிலர் என்பதால் சிஎஸ்ஆர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கடையை புதிதாக வாடகைக்கு எடுத்தது யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக சில தினங்களுக்கு முன்பு மூர்த்தி அவரது அடியாட்களுடன் ஹோட்டலுக்குள் நுழைந்து சமையலறை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்த்துள்ளார். மேலும் அந்த ஹோட்டலில் உணவு பொருட்கள் வாங்கிவிட்டு பணம் தராமல் செல்வதை மூர்த்தி வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories