தமிழ்நாடு

அ.தி.மு.க-வில் உச்சத்தை எட்டும் கோஷ்டி பூசல் : இருபிரிவுகளாக சாலையின் நடுவே சண்டையிட்ட அ.தி.மு.கவினர் !

திருப்பூரில் அ.தி.மு.க விழாவிற்கு வந்த முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான ஆனந்தனை வழிமறித்து அ.தி.மு.கவின் இன்னொரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கட்சியினருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 56 ஆவது வார்டு அ.தி.மு.க கிளை அலுவலகம் மத்திய காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள சூழ்நிலையில், இன்று அ.தி.மு.கவின் இன்னொரு பிரிவினர் சார்பாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மன்றம் திறப்பு விழா நடைபெற்றது.

இதனைத் திறந்து வைப்பதற்காக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனந்தன் வருகை தந்திருந்தார். இந்நிலையில், ஏற்கனவே 56வது வார்டுக்கு அனைத்து அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில், அவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் தன்னிச்சையாக முன்னாள் அமைச்சர் ஆனந்தன் கட்சிக்கு விரோதமாக அலுவலகம் திறந்து வைக்க வந்து இருப்பதாக குற்றம்சாட்டி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி தலைமையில் ஒரு பிரிவினர் முன்னாள் அமைச்சர் காரை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கட்சியினருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சரும் மாநகர் மாவட்ட செயலாளருமான ஆனந்தன் திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.கவிற்கு விரோதமாகவும் செயல்படுவதாகவும் தெற்கு தொகுதியை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க-வில் உச்சத்தை எட்டும் கோஷ்டி பூசல் : இருபிரிவுகளாக சாலையின் நடுவே சண்டையிட்ட அ.தி.மு.கவினர் !

உடனடியாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்து அ.தி.மு.கவின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்துப் பேசிக் கொள்ளலாம் என சமரசப்படுத்தியதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.

அ.தி.மு.கவில் ஏற்கெனவே பதவி போட்டியில், இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அடித்துக்கொண்ட கோஷ்டி பூசல் தற்போதுதான் ஒய்ந்துள்ள நிலையில், திருப்பூரில் அ.தி.மு.கவினர் இரு பிரிவுகளாக சண்டையிட்டுக் கொண்டது ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

banner

Related Stories

Related Stories