தமிழ்நாடு

“தி.மு.க வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும்” : தி.மு.கவினரிடம் நம்பிக்கையோடு மனு அளித்த பொதுமக்கள்!

தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சேலத்தில் பொதுமக்கள், வணிக அமைப்பினர், விவசாயிகள் என அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களது கருத்துகளை கேட்டறிந்தனர்.

“தி.மு.க வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும்” : தி.மு.கவினரிடம் நம்பிக்கையோடு மனு அளித்த பொதுமக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலத்தில், தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

கடந்த சில தேர்தலில் தி.மு.க தேர்தல் அறிக்கை என்பது, தேர்தலில் கதாநாயகனாக செயல்பட்டதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். அதே போன்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்து வாக்குறுதியும் நிறைவேற்றும் ஒரே கட்சி தி.மு.க என்றும் பொது மக்களிடம் நம்பிக்கை உள்ளது.

அதன்படி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிபதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.

“தி.மு.க வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும்” : தி.மு.கவினரிடம் நம்பிக்கையோடு மனு அளித்த பொதுமக்கள்!

அதன்படி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்து கருத்து கேட்பதற்காக, தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், சேலம் வந்து இருந்தனர்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், தி.மு.க பொருளாளருமான டி.ஆர்.பாலு தலைமையில், தி.மு.க துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதிசன், அந்தியூர் செல்வராஜ், கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, செய்தி தொடர்பாளார் டி கே எஸ் இளங்கோவன், ஆகியோர் கொண்ட குழுவினர், சேலத்தில் உள்ள தனியார் விடுதியில், சேலம் மாவட்டத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சேலம் வந்துள்ளதை அறிந்த பல்வேறு வணிக சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், சேலம் உருக்காலை தொழிலாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொது மக்களும் நேரில் வந்து தங்களது கோரிக்கைகளை தேர்தல் தயாரிப்பு குழுவினரிடம் வழங்கி தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

“தி.மு.க வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும்” : தி.மு.கவினரிடம் நம்பிக்கையோடு மனு அளித்த பொதுமக்கள்!

குறிப்பாக மத்திய மாநில அரசுகள் அறிவித்த எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கபட கூடிய விவசாயிகள், தி.மு.க தேர்தல் அறிவிக்கை குழுவினரிடம், எட்டு வழி சாலையால் பாதிக்கப்படும் விவசாய நிலங்கள் குறித்தும், மாநில அரசு தெரவித்த பொய்யான கருத்துகளையும் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் தி.மு.க தேர்தல் அறிக்கையில், எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளும் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்டு உள்ளதால், இந்த முறை எட்டு வழி சாலைக்கு எதிராக அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், ஏற்கனவே தி.மு.க தலைவர் ஸ்டாலின் எட்டு வழி சாலைக்கு எதிராக குரல் கொடுத்து உள்ளதாகவும், இந்த திட்டத்தை ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதே போன்று நெசவாளர்கள் அதிகம் உள்ள சேலம் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அ.தி.மு.க அரசால் நிறுத்தி வைக்கபட்டு உள்ள தகவல் தொழில் நுட்பா பூங்காவை மீண்டும் செயல்படுத்திட வேண்டும், கைத்தறி மற்றும் விசைததரி தொழிலாளர்களுக்கு உரிய சலுகைகள் கிடைத்திட வழி வகை செய்திட வேண்டும்.

“தி.மு.க வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும்” : தி.மு.கவினரிடம் நம்பிக்கையோடு மனு அளித்த பொதுமக்கள்!

மேலும், லாரி உரிமையாளர்களுக்கு என்று தனி நல வாரியம் அமைப்பது மட்டுமல்லாமல், சுங்க சாவடிகளை முறைப்படுத்திட வேண்டும், சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகள் வழங்கிட வேண்டும், சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்திட வேண்டும், பறிக்கபட்ட தொழிலாளர்களின் உரிமைகள் திரும்பி கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மனுக்கள் வழங்கப்பட்டன.

இந்த மனுக்களை பெற்று கொண்ட தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்று உறுதி அளித்தனர். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கருத்து கேட்பு கூட்டத்தில், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, ஆகியோர் கலந்து கொண்டு, தங்களது மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து குழுவினரிடம் மனுக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரிடம் மனுக்களை கொடுத்த விவசாயிகள், வணிக சங்கத்தினர், கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கூறும் போது, தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்துள்ளதாவும், ஏற்கனவே பல்வேறு தேர்தல்களில் தெரிவித்த வாக்குறுதிகளை, அவர்கள் ஆட்சியில் அமர்ந்த உடன் நிறைவேற்றி உள்ளதாகவும் அதன் அடிப்படையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நம்பிக்கையோடு, மனுக்களை கொடுத்து உள்ளதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க நிச்சியம் வெற்றி பெற்று, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கருத்து தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories