தமிழ்நாடு

“கூடலூர் பேருந்து நிலைய விரிவாக்கப் பணியை விரைந்து முடித்திடுங்கள்”- அரசுக்கு தி.மு.க எம்.எல்.ஏ கோரிக்கை!

கூடலூர் பேருந்து நிலைய விரிவாக்கப் பணியினை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூடலூர் தி.மு.க எம்.எல்.ஏ திராவிடமணி வலியுறுத்தியுள்ளார்.

“கூடலூர் பேருந்து நிலைய விரிவாக்கப் பணியை விரைந்து முடித்திடுங்கள்”- அரசுக்கு தி.மு.க எம்.எல்.ஏ கோரிக்கை!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“நீலகிரி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலைய விரிவாக்கப் பணியினை இனியும் தாமதிக்காமல் முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என கூடலூர் தி.மு.க எம்.எல்.ஏ திராவிடமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தமிழக முதல்வர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு கூடலூர் எம்.எல்.ஏ திராவிடமணி எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் நகரமாக கூடலூர் உள்ளது. கூடலூர் நகருக்கு தினமும் வந்து செல்லக்கூடிய மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் பேருந்து நிலையம் வசதியாக இல்லை என்பதால் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டவுடன் 2011-2012ம் நிதி ஆண்டில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஐம்பது இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தும் அப்போதைய மாவட்ட ஆட்சி தலைவரிடம் இது சம்பந்தமாக பேசி மலைப் பகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து எழுபத்தி ஐந்து இலட்சம் ரூபாய் பெற்று பேருந்து நிலைய விரிவாக்க பணியினை போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைத்து பல்வேறு முட்டுக்கட்டைகளுக்கு இடையில் 2013ம் ஆண்டு பணியினை துவக்கி வைத்தேன்.

அதன்பிறகு அந்த பணி தொடர்ந்து மேற்கொள்ளபட்டு முடிவடையாத நிலை இருந்தது. மேற்படி சூழ்நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் கடிதம் மூலமாக எடுத்து கூறியதோடு சட்டமன்றத்தில் இது சம்மந்தமாக நான் பேசியபோது அதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் உடனடியாக கூடலூர் போருந்து நிலைய கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்படும் என்ற உறுதிமொழியை அளித்தார்.

“கூடலூர் பேருந்து நிலைய விரிவாக்கப் பணியை விரைந்து முடித்திடுங்கள்”- அரசுக்கு தி.மு.க எம்.எல்.ஏ கோரிக்கை!

அதன் பிறகும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக உதகை வந்தபோது கூடலூர் பேருந்து நிலைய விரிவாக பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டு உடனடியாக பணி முடிக்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் இதுநாள் வரை அந்த பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ததாகவோ அல்லது பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாகவோ தெரியவில்லை.

எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி நிதி ஒதுக்கீடு செய்து கூடலூர் பேருந்து நிலைய விரிவாக்க பணியினை முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories