தமிழ்நாடு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க தலைவர் முக ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதேப்போல், தெப்பக்குளம் பகுதியில், முத்தமிழறிஞர் கலைஞரால் நிறுவப்பட்ட மருது சகோதரர்கள் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

இதனையடுத்து பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், தி.மு.க சார்பில் தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சிக்கு வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான பார்த்திபனூர் மற்றும் பசும்பொன்னில் மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் முத்துராமலிங்கம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, மாநகர் பொறுப்பாளர் கோ தளபதி மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் வ.பி.மூர்த்தி எம்எ.ல்.ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், மாநகர பொறுப்புக் குழு உறுப்பினர் வேலுச்சாமி, ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் மேயர் குழந்தைவேலு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories