தமிழ்நாடு

“தங்கம் விலை உயர்வு போல் தினசரி விலை ஏற்றத்தில் வெங்காயம்”: அரசின் அலட்சியத்தால் பறிதவிக்கும் பொதுமக்கள்!

மத்திய மாநில அரசுகள் வெங்காயத்தின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

நமது உணவு பழக்க வழக்கங்களில் முக்கியமாக அங்கு வகிப்பது வெங்காயம். கொரோனா காலத்தில் மக்களின் சளி தொந்தரவு இருந்து பாதுகாக்க பெருமளவில் வெங்காயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வந்தனர்.

இதனால் வெங்காயத்தின் பயன்பாடு என்பது அதிகமாகி வந்தது. இந்த நிலையில்தான் கடந்த சில நாள்களாக வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த வாரங்களில் சின்ன வெங்காயத்தின் விலை தினசரி 5 முதல் 10 ரூபாய் வரை உயர்ந்து இன்று மொத்த சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோல் பெரிய வெங்காயம் ஆன பல்லாரின் விலையும் 40 ரூபாயில் கடந்த வாரம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 100 ரூபாய் வரை ஒரு கிலோ விற்பனை செய்யப்படுகிறது.

“தங்கம் விலை உயர்வு போல் தினசரி விலை ஏற்றத்தில் வெங்காயம்”: அரசின் அலட்சியத்தால் பறிதவிக்கும் பொதுமக்கள்!

தினசரி விலை உயர்வுக்கு காரணம் வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காய வரத்து குறைந்த காரணத்தால் இது போன்ற விலை உயர்வு ஏற்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனார்.

இதுபோன்று வெங்காயத்தின் விலை ஏறி வருவதால் பொதுமக்கள் வெங்காயத்தை வாங்கும் சக்தியை இழந்து வருகின்றனர். தினசரி ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை ஏற்றம் கண்டு வருவதால் தாங்கள் பெரும் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் பல இடங்களில் வெங்காயத்தின் விலைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது, உடனே மத்திய மாநில அரசுகள் வெங்காயத்தின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories