தமிழ்நாடு

அ.தி.மு.க ஆட்சியில் தலைவிரித்தாடும் கந்துவட்டிக் கொடுமை : ஆம்பூரில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை !

ஆம்பூர் அருகே கந்துவட்டி கும்பல் மிரட்டியதாக இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியில் தலைவிரித்தாடும் கந்துவட்டிக் கொடுமை : ஆம்பூரில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராபட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வம் - மல்லிகா தம்பதியினர். இவர்களுக்கு 4 பிள்ளைகள்; இவர்களது இரண்டாவது மகன் சிரஞ்சீவி இவர் வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

தந்தை செல்வம் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகிறார். தாய் மல்லிகா தனியார் உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், குடும்ப வறுமை காரணமாக அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடு அடமானம் வைக்கும் நிலைமைக்கு வந்துள்ளனர்.

இதனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு 16.05.2018 அரசு தொகுப்பு வீட்டை வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் விநாயகா பைனான்ஸில் 1,25000 ரூபாய்க்கு அடமானம் வைத்து உள்ளனர். 24 மாதங்கள் 7500 விகிதம் தவணை முறையில் கட்ட வேண்டும் என்று வீடு அடமானம் வைத்துள்ளனர்.

அ.தி.மு.க ஆட்சியில் தலைவிரித்தாடும் கந்துவட்டிக் கொடுமை : ஆம்பூரில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை !

கடந்த ஆண்டு 15.04.2020 அன்று தவணை முடிவடைந்த நிலையில், சில மாதங்களாக கட்ட தவறியதனால் நேற்று இரவு குடியாத்தம் ஸ்ரீ சாய் விநாயகா பைனான்ஸ்லிருந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்த சிரஞ்சீவியை அவதூறாக பேசி 2 நாட்களுக்குள் வீடு காலி செய்ய வேண்டுமென்று மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சிரஞ்சீவி இன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், உடலை கைப்பற்றிய ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர், வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

தற்கொலை வழக்கு என்று பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சடலத்தை அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் விரைந்து சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சிரஞ்சீவி உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் கந்து வட்டி கும்பல் மீது வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு சிரஞ்சீவியின் உடலை தகனம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories