தமிழ்நாடு

கன்னியாகுமரி இடைத்தேர்தல்: பிரதிநிதிகளுக்கு தெரியாமல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கடத்தல் - மக்கள் புகார்!

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்காக வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் இரகசியமாக அதிகாரிகள் கடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

கன்னியாகுமரி இடைத்தேர்தல்:  பிரதிநிதிகளுக்கு தெரியாமல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கடத்தல் - மக்கள் புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திற்குள் உள்ள பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு வாக்குப்பதிவு எந்திரங்களில், ஏற்கனவே பதிவான வாக்குகளை அழிக்கும் பணி மற்றும் பழுதான இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. திருச்சி பெல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் பணியில் ஈடுபட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், நேற்று இரவு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை இங்கு இருந்து அதிகாரிகள் ரகசியமாக வெளியே கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த வளாகத்தை முற்றுகையிட்டனர்.

கன்னியாகுமரி இடைத்தேர்தல்:  பிரதிநிதிகளுக்கு தெரியாமல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கடத்தல் - மக்கள் புகார்!
கோப்பு படம்

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரணியல் போலிஸார் அரசியல் கட்சிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதை தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை சரி செய்து தயாராக வைத்துள்ளனர்.

இந்நிலையில், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர் விசாரித்தபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியதால் இச்சம்பவத்தில் மறைந்துள்ள உண்மையை விசாரிக்க கேட்டு நாளை அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories