தமிழ்நாடு

தங்கத்தை போல் கிடுகிடுவென ஏறும் வெங்காய விலை... விலைவாசியை கட்டுப்படுத்தாதது ஏன்? அரசுக்கு மக்கள் கேள்வி!

சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போல் கிடுகிடுவென ஏறும் வெங்காய விலை... விலைவாசியை கட்டுப்படுத்தாதது ஏன்? அரசுக்கு மக்கள் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 450க்கும் மேலான வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும்.

தற்போது ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்துவருவதால், காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

ஆந்திராவில் இருந்து தினந்தோறும் 150 வாகனங்களில் கொண்டு வரப்பட்ட வெங்காயங்கள் தற்போது 50 வாகனங்களில் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக வெங்கயாத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

தங்கத்தை போல் கிடுகிடுவென ஏறும் வெங்காய விலை... விலைவாசியை கட்டுப்படுத்தாதது ஏன்? அரசுக்கு மக்கள் கேள்வி!

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 100 முதல் 110 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சாம்பார் வெங்காயம் ரூ.100க்கும், பீன்ஸ், முருங்கைக்காய் 80ரூபாய்க்கும், பீட்ரூட் உள்ளிட்ட பிற காய்கறிகள் கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அப்படியெனில் அங்கிருந்து வாங்கி நகரங்களில் விற்பனை செய்யும் போது வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மேலும் அதிகமாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

தங்கத்தின் விலை கூட குறைந்திருக்கும் போது வெங்காயத்தின் விலை அதிகரிப்பது அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

banner

Related Stories

Related Stories