தமிழ்நாடு

நீட் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு; ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நீட் : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு; ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்:  மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, அரசுக்கு பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த மார்ச் மாதம் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில், சுகாதாரத்துறை செயலர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், சட்டத்துறை செயலர் உள்ளிட்டோர் 6 உறுப்பினர்களாக இருந்தனர். இந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதுடன், அதனடிப்படையில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

அரசு இதற்கு ஒப்புதல் வழங்கி ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளனர். ஆனால் இப்போது வரை ஆளுநர் எதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆளுநர் ஒப்புதலுக்கு முதலமைச்சர் பழனிசாமி அழுத்தம் கொடுக்காமல் இருப்பதற்கு கண்டனம் எழுந்துவருகிறது.

இந்நிலையில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, இன்று (19-10-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

“மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்றுவரை தமிழக ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அதுகுறித்த எந்த அழுத்தத்தையும் ஆளுநருக்குக் கொடுக்காமல் முதலமைச்சர் பழனிசாமி வேடிக்கை பார்ப்பதும்; அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், "தமிழக ஆளுநர் முதலமைச்சர் - மத்திய பா.ஜ.க. அரசு" ஆகியோர் ஒரு ரகசியக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என்றும் - நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories