தமிழ்நாடு

நீட் ஆள்மாறாட்டம்: ஆதார் புகைப்படத்தை வைத்து அடையாளம் காண முடியவில்லை - ஆதார் ஆணையம் அலட்சிய பதில்!

நீட் தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் பதிலளித்துள்ளது.

நீட் ஆள்மாறாட்டம்: ஆதார் புகைப்படத்தை வைத்து அடையாளம் காண முடியவில்லை - ஆதார் ஆணையம் அலட்சிய பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீட் தேர்வில் மோசடி செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக இரண்டு வழக்குகள் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் உள்ளன.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் மோசடி செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என சுமார் 15 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மோசடி செய்து தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் 10 புகைப்படத்தை சி.பி.சி.ஐ.டி போலீசார் வெளியிட்டனர்.

இதுதொடர்பாக அவர்களது புகைப்படத்தை வைத்து விவரங்களை கொடுக்குமாறு பெங்களூரில் உள்ள ஆதார் ஆணையத்திற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் கடிதம் எழுதியிருக்கிறார்.

நீட் ஆள்மாறாட்டம்: ஆதார் புகைப்படத்தை வைத்து அடையாளம் காண முடியவில்லை - ஆதார் ஆணையம் அலட்சிய பதில்!

இது தொடர்பாக ஆதார் ஆணையம் சி.பி.சி.ஐ.டி அளித்த புகைப்படத்தில் உள்ளவர்களை தங்களுடைய தகவல் தரவுகளின் மூலம் கண்டுபிடிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ரஷீத் என்பவர் தலைமறைவாக உள்ளதாகவும் அவரை தீவிரமாக தேடி வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories