இந்தியா

“நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி: OMR சீட்டில் சந்தேகம்; ஒரிஜினல் சீட் வேண்டும்”- அரியலூர் மாணவி ஆவேசம்!

நீட் தேர்வில் தான் ஷேடோ செய்த ஒ.எம்.ஆர் சீட்டில் சந்தேகம் உள்ளதாகவும் தான் எழுதிய .ஒ.எம்.ஆர் சீட் ஒரிஜினல் வேண்டும் என நீட் தேர்வு எழுதிய மாணவி மஞ்சுகோரிக்கை விடுத்துள்ளார்.

user
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியாகிய உள்ள நிலையில், நாடு முழுவதும் நீட் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

வெளியான நீட் தேர்வு முடிவுகளில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தன்னுடையது இல்லை என கோவையை சேர்ந்த மாணவர் மனோஜ் புகார் அளித்துள்ளார். அதேப்போல், நீட் தேர்வில் தான் ஷேடோ செய்த ஒ.எம்.ஆர் சீட்டில் சந்தேகம் உள்ளதாகவும் தான் எழுதிய .ஒ.எம்.ஆர் சீட் ஒரிஜினல் வேண்டும் என நீட் தேர்வு எழுதிய மாணவி மஞ்சுகோரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் தத்தனூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் - மகாராணி. இவர்களுடைய மகள் மஞ்சு அரியலூரில் தனியார் பள்ளி ஒன்றில் சி.பி.எஸ்.இ படித்து வந்தார். நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 500/299 மதிப்பெண் பெற்றுள்ளார்.

“நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி: OMR சீட்டில் சந்தேகம்; ஒரிஜினல் சீட் வேண்டும்”- அரியலூர் மாணவி ஆவேசம்!

மகாராணி தனது மகள் மருத்துவராக வேண்டும் என்பதற்காகவே தனியார் கல்லூரியில் பணியாற்றிய வேலையை விட்டு தனது மகள் மஞ்சுவிற்கு நீட் பயிற்சி அளித்துவந்தார்.

இந்நிலையில் மாணவி மஞ்சு நீட் தேர்வை நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி சென்டரில் தேர்வு எழுதினார். இந்த தேர்வில் 3 கேள்விக்கு பதில் எழுதாமல் விட்டதாக கூறும் மஞ்சு 680 மதிப்பெண் கிடைக்கும் என எதிர்ப்பார்த்து காத்திருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் வந்தது என்னவோ 37 மதிப்பெண் மட்டுமே கிடைத்துள்ளது.

இதனைகண்டு அதிரச்சி அடைந்த மஞ்சு தான் எழுதிய ஓஎம்ஆர் சீட் கேட்டு கோரிக்கைவிடுத்துள்ளார். இதுகுறித்து நீட் மாணவி மஞ்சு கூறும்போது, தேர்வில் தான் ஷேடோ செய்த ஒ.எம்.ஆர் சீட்டில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தனக்கு ஒரிஜினல் ஓ.எம்.ஆர் சீட் வேண்டும் என கூறியுள்ளார்.

“நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி: OMR சீட்டில் சந்தேகம்; ஒரிஜினல் சீட் வேண்டும்”- அரியலூர் மாணவி ஆவேசம்!

எனெனில் தன்னுடைய ஒ.எம்.ஆர் சீட்டில் குளறுபடி செய்து பேப்பரை மாற்றி இருக்கலாமோ என்று புகார் கூறும் இவர் இதனால் தன்னுடைய இரண்டு வருடம் உழைப்பு கேள்வி குறியாகியுள்ளது என கவலையுடன் தெரிவித்தார்.

இருந்தபோதும், தான் மனம் தளரவில்லை என்றும் தன்னைப்போல் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்களும் மன தைரியத்துடன் இருக்கவேண்டும் அவர்களது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு ஆறுதலாகவும் பக்கபலமாகவும் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவியர்கள் அசல் ஒ.எம்.ஆர். விடைத்தாள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர், விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாக தொடர்ந்து மாணவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories