தமிழ்நாடு

சென்னையில் மேலும் 1036 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 56 பேர் பலி.. வைரஸ் பரவலை தடுப்பதில் தொடரும் மெத்தனம்!

பல மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் புதிதாக 88 ஆயிரத்து 643 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3,914 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் 1036 பேருக்கும், கோவையில் 365, திருவள்ளூரில் 195, சேலத்தில் 188, செங்கல்பட்டில் 174, திருப்பூரில் 166, காஞ்சியில் 130, நாமக்கலில் 117, ஈரோட்டில் 111 என அதிகபட்சமாக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து மொத்தமாக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.87 லட்சத்து 400 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 56 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள். மொத்தமாக 10 ஆயிரத்து 642 பேர் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள்.

மேலும், ஒரெ நாளில் 4,929 பேர் டிஸ்சார்ஜ் ஆனதை அடுத்து, இதுவரையில் 6.37 லட்சத்து 637 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். ஆகவே தற்போது 39 ஆயிரத்து 121 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories