தமிழ்நாடு

“வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாளில் அவரைப் போன்ற நெஞ்சுரம் கொள்வோம்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

“வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாளில் அவரைப் போன்ற நெஞ்சுரம் கொள்வோம்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வீரபாண்டிய கட்டபொம்மனின் 221 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப் படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் 221 ஆவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க சார்பில், வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப் படத்திற்கு தி.மு.கவினர் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப்படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

“வீரம் விளைந்த நெல்லைச் சீமையில் பிறந்து நாட்டின் விடுதலைக்காய் தன் உடல் பொருள் உயிர் என அனைத்தையும் தந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாள் இன்று!

அடக்குமுறைக்கு அஞ்சாத வீரமும், ஆதிக்கத்துக்கு அடிபணியாத தீரமும், கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகமும் - கட்டபொம்மனின் வாழ்க்கைப் பாடங்கள்! அவர் நினைவுநாளில் அவரைப் போன்ற நெஞ்சுரம் கொள்வோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories