தமிழ்நாடு

நீலகிரியில் யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த ரிசார்ட்களை இடிக்க உத்தரவு : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நீலகிரி யானை வழித்தடத்தில் உள்ள கட்டிடங்கள் ரிசார்ட்களை இடிக்க உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீலகிரியில் யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த ரிசார்ட்களை இடிக்க உத்தரவு : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழிதடத்தின் குறுக்கே கட்டப்பட்ட ரிசாட் உள்ளிட்ட கட்டிடங்களை சீல் வைக்க உச்சநீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. ஆனால், அவை மீண்டும் இயங்குவதாக உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ரிசார்ட்டுகள் மற்றும் கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து 34 ரிசார்ட் உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர். பல கட்டிடங்கள் வனப்பகுதியில் இல்லை என்பதால் சீல் வைக்கு கோரிய உத்தரவை நீக்கவேண்டும் என கோரினார்கள்.

இதனையடுத்து இதுகுறித்து விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. மேலும், அதற்காக நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

நீலகிரியில் யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்த ரிசார்ட்களை இடிக்க உத்தரவு : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அந்த குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், யானைகள் வழித்தடத்தில்தான் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தது. இதனையடுத்து அறிக்கையில் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், கட்டிடங்களை இடிக்க தடைவிதிக்க முடியாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories