தமிழ்நாடு

கிசான் திட்ட முறைகேடு விவகாரம்: மதுரையில் தகுதியற்றவர்களிடம் இருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மீட்பு!

பிரதமர்-கிசான் திட்டத்தில் நடந்த மோசடியில், தமிழகத்தில் ரூ. 110 கோடிக்கு மேல் முறைகேடு விவகாரம்...

PC
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிசான் திட்டத்தின் கீழ் 110 கோடி ரூபாய் அளவிற்கான மோசடி சமீபத்தில் அம்பலமானது. அரசாங்க அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் உதவியுடன் நடந்த இந்த மோசடியில், ஐந்தரை லட்சம் போலி பயனாளர்கள் என ஆரம்பக்கட்டத்தில் கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கிசான் திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட வாரியாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 77 பேர் தகுதியற்ற பயனாளர்கள் எனக் கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கையில் சிறப்புக் குழு ஈடுபட்டு வரும் நிலையில், இன்று வரை சுமார் 5,930 பேரிடமிருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்த பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கிசான் திட்ட முறைகேடு விவகாரம்: மதுரையில் தகுதியற்றவர்களிடம் இருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மீட்பு!

மேலும் மீதமுள்ள பணத்தை மீட்க அதிகாரிகள் கிராமங்களால் முகாமிட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்குத் தகுதியற்றவர்களை கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து போலிஸ் உதவியுடன் பணத்தை மீட்க மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி வினாய் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று முதல் போலீஸ் பாதுகாப்புடன் பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.

இதுமட்டுமில்லாமல் வேளாண்மை இணை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே 2 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், மதுரையில் மேலும் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் இன்று கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

banner

Related Stories

Related Stories