தமிழ்நாடு

சூர்யா பட பாணியில் கடத்தல் நாடகமாடிய 14 வயது சிறுவன்.. 10 லட்சம் கேட்டு மிரட்டல்.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னையில் 14 வயது சிறுவனை கடத்தி 10 லட்ச ரூபாயை இருந்து கேட்டு வந்த மிரட்டல் அழைப்பால் தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார்.

சூர்யா பட பாணியில் கடத்தல் நாடகமாடிய 14 வயது சிறுவன்.. 10 லட்சம் கேட்டு மிரட்டல்.. சென்னையில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை திருவல்லிக்கேணி சுபத்ரால் தெருவை சேர்ந்தவர் டோளா ராம்.இவர் இருசக்கர வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகின்றார். இவரது மகன் தேவேந்திரன் (14) 9ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று சிறுவன் தேவேந்திரன் டியூசனுக்கு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் தேவேந்திரனின் செல்போன் எண்ணில் இருந்து அவரது தந்தை டோளா ராமிற்கு கால் வந்தது.அதில் பேசிய நபர் ஒருவர் உனது மகன் தேவேந்திரனை கடத்தி விட்டதாகவும்,10லட்சம் ரூபாய் பணம் தரவில்லை என்றால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த டோளாராம் பதற்றமாக இருந்த போது மீண்டும் தொடர்பு கொண்டு பேசிய சிறுவன் தன்னை ஒரு கும்பல் கடத்தி சேப்பாக்கம் ஸ்டேடியம் புலூ கேட் அருகே விட்டு சென்றதாக சிறுவன் தேவேந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து அண்ணா சாலை போலீசாருக்கு தகவல் தெரியவர சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.மேலும் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சிறுவன் ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.இதனால் ஆட்டோ நம்பரை வைத்து ஆட்டோ ஓட்டுனரை கண்டுபிடித்து விசாரிக்கும் போது சிறுவன் தேவேந்திரன் மற்றும் அவரது நண்பர் ஆட்டோவில் ஒன்றாக வந்து சேப்பாக்கம் பகுதியில் இறங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதனால் சிறுவனுடன் வந்த அந்த நபர் யார் என்பது குறித்து சிறுவனிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் பதில் தெரிவித்துள்ளார்.இவரிடம் போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் சிறுவன் தேவேந்திரனே கடத்தியதாக நாடகமாடி 10லட்சம் கேட்டு தந்தையை மிரட்டியது தெரியவந்தது.

இதனால் சிறுவன் தேவேந்திரன் 10லட்சம் தந்தையிடம் கேட்டது எதற்கு என்பது குறித்து ஜாம்பஜார் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories