தமிழ்நாடு

பா.ஜ.க-வில் இணைந்த மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி புகார் - தலைமறைவு!

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் மோடியால் மான்கிபாத் நிகழ்ச்சியில் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்து வட்டி புகார் எழுந்துள்ளது. மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன், சமீபத்தில் தான் தனது மனைவியுடன் பா.ஜ.கவில் இணைந்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில், தனது மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயில், அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி உதவினார். அவரது இந்த செயல் பெரிதும் பாராட்டப்பட்டது. பிரதமர் மோடி வரை இந்த செய்தி சென்று சேர்ந்தது.

மான்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் மோகனின் குடும்பத்தை குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி. அந்த பாராட்டு கிடைத்ததுமே மோகன் குடும்பத்துடன், பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டதாக அக்கட்சி தெரிவித்தது. முதலில் அத்தகவலை மறுத்த அவர் சில நாட்களுக்கு பின் தன் மனைவியுடன் பா.ஜ.க-வில் இணைந்ததாக கூறினார்.

இந்நிலையில் தான் அன்புநகர் பகுதியைச் சேர்ந்த செங்கிராஜன் என்ற நபர், மோகன் மீது கந்து வட்டி புகார் அளித்துள்ளார். மோகனிடம் வாங்கிய 30,000 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்திய போதும், தன்னிடம் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவதாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலிஸார் விசாரணைக்கு அழைத்தபோது மோகன் தலைமறைவாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories