தமிழ்நாடு

"தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்; சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும்" - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

தமிழர் உணர்வுடன் விளையாடவேண்டாம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

"தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்; சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும்" - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வரும் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். வணிக வளாகம் கட்டுவதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள ஐ.ஓ.பி கிளையில் லோன் கேட்டுச் சென்றுள்ளார்.

அப்போது வங்கி மேலாளர் விஷால் பட்டேல், இந்தி தெரியுமா என்று அவரிடம் கேட்டதற்கு தமிழும், ஆங்கிலமும் தெரியும் என்று மருத்துவர் கூறியுள்ளார். ஆனால் வங்கி மேலாளர் மீண்டும், மீண்டும் மொழி பற்றிப் பேசியுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்து வீடு திரும்பிய பாலசுப்பிரமணியன், மொழி பற்றி பேசி கடன் தர மறுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி வங்கி மேலாளரிடம் நஷ்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் வங்கியில், இந்தி தெரியாவிட்டால் கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதுகுறித்து அறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழர் உணர்வுடன் விளையாடவேண்டாம் என எச்சரித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு :

“ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, ‘இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது’ என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி!

ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, ‘இந்தி...

Posted by M. K. Stalin on Monday, 21 September 2020

இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா? பா.ஜ.க அரசின் பின்புலம் இதற்குக் காரணமா?

எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள்! சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு; எச்சரிக்கை!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories