தமிழ்நாடு

“முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா?” : இளைஞர் கொலை வழக்கில் கனிமொழி எம்.பி காட்டம்!

தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்யாதது ஏன்?, முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா? என கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்

kanimozhi m.p
twitter kanimozhi m.p
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகிலுள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தனிஸ்லாஸ் என்பவரது மகன் செல்வன் (30). இவருக்கும் உசரத்துக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மகராஜன் என்பவரது மகனும் அதிமுக பிரமுகருமான திருமணவேல் என்பவருக்கும் இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், செல்வன் கடந்த செப்டம்பர் 17ம் தேதி கடத்தி கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பந்தமாக தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட ஆறுபேர் மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கில், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனை கைது செய்யாமல், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, கொலையான செல்வனின் உறவினர்கள் பிரேதபரிசோதனை செய்யப்பட்ட செல்வத்தின் பிணத்தை வாங்க மறுத்து, 4வது நாளாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

“முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா?” : இளைஞர் கொலை வழக்கில் கனிமொழி எம்.பி காட்டம்!

இந்த நிலையில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனபிரியா செல்வன் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தி.மு.க சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் சொக்கன் குடியிருப்பு கிராமத்திற்கு நேரில் சென்று படுகொலை செய்யப்பட்ட செல்வனின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் அவர்களின் சட்ட போராட்டங்களுக்கு துணை புரிவதாக தெரிவித்தார். இந்த பிரச்சினையை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுசென்று நல்ல முடிவு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும், இந்தப் படுகொலையில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி, முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா? என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க எம்.பி கனிமொழி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, செல்வன் என்பவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.

ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ?” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories