தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் திருடனாக மாறிய சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய சென்னை பெண் போலிஸ்!

திருடனாக பாதை மாறிய சிறுவனுக்கு செல்போன் வாங்கி கொடுத்து வழி நடத்திய பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் திருடனாக மாறிய சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய சென்னை பெண் போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் திருடனாக பாதை மாற நினைத்த சிறுவனுக்கு போலிஸார் செல்போன் வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் குடும்ப சூழ்நிலை சரியில்லாமல் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால் செல்போன் கூட வாங்க வழியில்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கொரானா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுவதால் செல்போன் இல்லாத காரணத்தால் வகுப்புகளை கவனிக்க முடியாமல் சிறுவன் அலைந்து திரிந்து உள்ளார். இதனால் வீட்டின் அருகே பார்க்கும் இளைஞர்களை எல்லாம் பழைய செல்போன் இருக்கிறதா என கேட்டு வந்திருக்கிறான்.

இதனைப் பயன்படுத்திக்கொண்ட இரண்டு இளைஞர்கள் என்னுடன் வா செல்போன் வாங்கித் தருகிறேன் எனக் கூறி அவனை அழைத்துச் சென்று திருவொற்றியூர் கான்கார் பகுதியில் மேம்பாலம் அருகே லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனை கண்ட பொதுமக்கள் இளைஞர்களை துரத்தியிருக்கிறார்கள். இதில் இளைஞர்கள் இருவரும் தப்பிச் சென்றதையடுத்து அந்த சிறுவன் மட்டும் பிடிபட்டிருக்கிறார்.

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் திருடனாக மாறிய சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய சென்னை பெண் போலிஸ்!

உடனடியாக சிறுவனை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதனையடுத்து வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி சிறுவனை அழைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட காரணம் என்ன என விசாரணையில் மேற்கொண்ட போதுதான் உண்மை தெரியவந்திருக்கிறது.

ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் இல்லாததால் தவித்து வந்த சிறுவனை திருடனாக மாற்ற முயற்சித்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனை நல்வழிப்படுத்துவதற்காக 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன் ஒன்றை திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

சிறுவனின் மனநிலையை மாற்றும் விதமாக அவனுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து பாடத்தில் கவனம் செலுத்த அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளர் புவனேஸ்வரிக்கு காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் பாராட்டை தெரிவித்துள்ளார். இதனையடுத்து செல்போன் கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன் பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

banner

Related Stories

Related Stories