தமிழ்நாடு

கொலைக்கு போட்ட ஸ்கெட்ச் தோல்வியடைந்ததால் 10ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு: ரவுடிகள் கையில் தமிழகம்?

பத்தாம் வகுப்பு மாணவனை கத்தியால் தாக்கி விட்டு தப்பிய கும்பலை போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

சென்னை விருக்கம்பாக்கத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் அவரது மகன் தியாகு பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மாணவன் தியாகு தனது வீட்டின் அருகில் அமர்ந்து இருந்த நேரத்தில், இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து மாணவனை உடனடியாக அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், மாணவனை தாக்கிய கும்பலை சேர்ந்த ஒருவர் ரவுடி புறா மணி மற்றுன் அவரது சகோதரர் சுமன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் முன்விரோதம் காரணமாக வேறு ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு அங்கு வந்ததாகவும் அவர் இல்லாத காரணத்தினால் ஆத்திரமடைந்து மாணவனை தாக்கி விட்டு சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து விருகம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories